Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இதுதான்

Sooriyan Gossip - 10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,307 Views
400 ஆண்டுகளுக்கு நடுக்கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றின்   பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போத்துக்களின் லிஸ்பன் நகரின் கடல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வில் அவை 400 ஆண்டுகளுக்கு முன்னையவை  என தெரிய வந்துள்ளன. 
 
அந்த கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட உடைந்த சில பாகங்களில், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள், பித்தளை பீரங்கிகள், சில ஆடைகள், அலங்காரப் பொருட்கள், ரூபாய் தாள்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
 
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, 1575-ம் ஆண்டு முதல் 1625-ம் ஆண்டு வரை போர்த்துகீசியர்கள் இந்தியாவுடன் வர்த்த உறவை கொண்டிருந்தனர். 
 
இந்தியாவில் இருந்து மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், ஆடைகள், கலைப்பொருட்கள் போன்றவை இந்தியாவில் இருந்து போர்த்துக்கல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். 
 
அந்த பொழுதுகளில்தான், இந்தியாவில் இருந்து போர்த்துக்கல் நாட்டுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற கப்பல், லிஸ்பன் நகருக்கு அருகே கடலில் மூழ்கியுள்ளது.
 
இந்த கப்பல் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றது, அதில் பயணம் செய்தவர்கள் போன்ற எந்த விபரமும்  இதுவரை கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், இதுகுறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யவுள்ளனர். விரைவில் இதுதொடர்பான ஏனைய மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே இந்த கப்பலில் அடிமைகளாக சிலர் அழைத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. அவர்கள் யார் என்ற விவரங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top