Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
3 மாத கைக்குழந்தையின் வரலாற்று சாதனை

Sooriyan Gossip - 3 மாத கைக்குழந்தையின் வரலாற்று சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

323 Views
நியூசிலாந்து பிரதமர் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன். இவர் தனது 3 மாத குழந்தையுடன் ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்று புதிய வரலாற்றைப் படைத்து, அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இதுவரையிலும் எந்த ஒரு நாட்டு பிரதமரும் தமது குழந்தையுடன் இவ்வாறு ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்றதில்லை. அதுமட்டுமல்லாமல், தாய்மை அடைந்த, வேலைக்குச் செல்லும் பெண், தன்னுடைய தாய்நாட்டுக்குச் சிறப்பான சேவையைச் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் என்று அங்கு வந்திருந்த ஏனைய நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள் என அனைவராலும் பாராட்டப்படுகிறார்.

ஜெசிந்தா அர்டெர்னுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் பிரதமருக்கான பணிகளை வீட்டில் இருந்தே கவனித்து வந்த ஜெசிந்தா, ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா, அல்லது பிரதிநிதியை அனுப்புவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

ஆனால், யாரும் எதிர்பாரா சூழலில் தனது 3 மாதக் குழந்தை நேவ் டி அரோஹாவை சுமந்துகொண்டு, கணவர் கிளார்க் கேபோர்ட் உடன் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
நியூசிலாந்து பிரதமரின் குழந்தைக்கும் பாதுகாப்பின் பொருட்டு ஐ.நா.சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பிரதமரின் கணவர் கிளாபோர்ட் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இதன்போது, நியூசிலாந்து பிரதமரின் உரை நிகழ்த்தும் நேரம் வந்ததும் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் எழுந்து பேசும் போது, குழந்தையைக் கணவர் கிளார்க் கேபோர்டிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசி முடித்தார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அளித்த பேட்டியில், ''நான் தாய்மை அடைந்த போதிலும் என்னுடைய குழந்தையை வைத்துக்கொண்டு என்னுடைய பணியைச் செய்ய முடியும். பல்வேறு இடங்களில் நீங்கள் குழந்தையுடன் பணி செய்ய இயலாது. என்னால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியுமென்றால், அதற்கான மாற்றத்தையும் உருவாக்கச் சிந்திக்கவும் முடியும்'' எனத் தெரிவித்தார்.

ஐ.நா.சபையின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபெனே துஜாரிக் கூறுகையில், ''தன்னுடைய நாட்டுக்கு, தன்னைக் காட்டிலும் வேலை பார்க்கும் பெண்களில் வேறு எவரும் சிறப்பான பிரதிநிதியாக இருக்க முடியாது என்பதை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் வெளிக்காட்டிவிட்டார்.

உலகில் உள்ள தலைவர்களில் 5 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். அவர்களை இந்தச் சபை அன்புடன், மரியாதையுடன் வரவேற்கிறது'' எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்க குழந்தையுடன் சென்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலை தளங்களில் அனைவரும் பார்த்து பகிர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர்.a
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top