Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
போதைப்பொருள் கடத்தலுக்கு பெண்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கில அறிவு அவசியம் - பரபரப்பு வாக்குமூலம்.

Sooriyan Gossip - போதைப்பொருள் கடத்தலுக்கு பெண்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கில அறிவு அவசியம் - பரபரப்பு வாக்குமூலம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

656 Views
போதை மருந்துகளை கடத்துவதற்கு நேர்முகத் தேர்வு வைத்து, அதில் தெரிவாகும் ஆற்றல் மிகு பெண்களை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. 
போதை மருந்துகளை கடத்தும் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 
 
இதுகுறித்து மும்பை போதை மருந்துத் தடுப்புத்துறை அதிகாரி ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுளளார். 
 
சில நாட்களுக்கு முன், மும்பை போதை மருந்துத் தடுப்புத் துறையினர் 27 வயதுடைய பெண்  ஒருவரை கைது செய்தனர்.
 
ஃபுர்கானா ஷேக் என்ற இந்த பெண், Qatar விமானத்தில் 464 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.
 
இவரை கைது செய்து விசாரித்ததில்  மும்பையைச் சேர்ந்த தபாசம் ஷேக் மற்றும் ரஷீத் ஃபராஸ் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த ரஷித் முல்லா மற்றும் முஸ்தகிம் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
 
இதில் தபாசம் ஷேக்குக்கு, போதைப் பொருட்களை  எடுத்துச் செல்லத் திறமையான பெண்களை  கண்டுபிடிப்பதுதான் வேலை. இந்த வேலையில் ஈடுபடும் பெண்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
 
அத்துடன் ஆங்கிலப் புலமை கொண்டவர்களாகவும் மேற்கத்திய ஆடைகளை அணிபவர்களாகவும் இருக்கவேண்டும். 
 
அவர்களை உரிய முறையில் நம்பவைக்கும் தபாசம், பின்னர்  நேர்காணலுக்காக அழைத்துச் செல்வார். மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மற்ற நகரங்களிலும் நேர்காணல் நடைபெறுகின்றது. அதில் தேர்வு செய்யப்படுவர்கள், மோசடி கும்பலுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.
 
மேலும் இந்த போதை மருந்துகளை டோகாவிற்கு  கடத்துவதற்காக ஒருமுறை பயணம் செய்வதற்காக அவர்களுக்கு இந்திய ரூ.70,000 வரை தரப்படும். திரும்பி வரும்போது டுபாயில் இருக்கும் மேலும் ஒரு போதை பொருள் கும்பலிடம் இருந்து  தங்கம் கடத்தப்படும். 
 
மற்றவர்கள் அறியாமல் கடத்தலை மேற்கொள்ள குழந்தைகளின் பொம்மைகளிலும், இனிப்புப் பெட்டிகளிலும் போதைப் பொருள்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும். 
 
டோகாவில்  உள்ள சொந்தங்களை சந்திக்க செல்லும் இந்த பெண்கள், அவர்களது உறவு முறை குழந்தைகளுக்கு 
இனிப்பும் பொம்மைகளும் கொண்டு செல்கிறார் என்பதாக மற்றவர்கள் நினைத்துக்கொள்வார்கள். மீண்டும் அந்த பெண் திருப்பி இந்தியா வரும்போது நகைகளை எப்படியாவது நாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார். 
 
இதுவரை இதுபோல 25 பெண்கள் நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top