Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
Mr Ocean 2018 ஆணழகனாக கிராண்ட்பாஸ் இளைஞர் ; என்ன சொல்கிறார் கேளுங்கள்

Sooriyan Gossip - Mr Ocean 2018 ஆணழகனாக கிராண்ட்பாஸ் இளைஞர் ; என்ன சொல்கிறார் கேளுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

651 Views
சாதனைகள் பல தளங்களிலும், பல்வேறு வயதினராலும் படைக்கப்பட்டு வருவது இந்திய காலத்தைப் பொறுத்தவரைக்கும் பரவலாக காண முடிகிறது. 
 
அந்தவகையில், அண்மையில் கொழும்பில் இலங்கையளவில் இடம்பெற்ற Mr ocean 2018  ஆணழகன் தேர்வில், பலத்த போட்டிகளுக்கு மத்தியில் தெரிவாகியுள்ள ஜெரோஷன் ஸ்மித், அடுத்த வருடம் சீனாவில் இடம்பெறவுள்ள   Mr ocean 2018  பிரதான போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ளனர். 
 
நமது நாட்டை கௌரவப்படுத்தும் இந்த அழகன் நம்மோடு பகிர்ந்துகொண்டவை..

கொழும்பிலே கிராண்ட் பாஸ் என்னோட சொந்த இடம் என ஆரம்பிக்கும் ஜெரோஷன், சகோதர மொழியில் தான் ஆரம்பக் கல்வியினைத் தொடர்ந்தேன் என்கிறார். பின்னர், சகோதர மொழி நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கம், அவர்கள் மத்தியிலிருந்து கற்றுகொண்டவை, இவைகளோடு அவர்கள் கற்பித்த எதிர்மறை விஷயங்களுமே என்னை இந்த துறைக்குள் தள்ளியது எனலாம்.

ஆரம்பத்தில், அவர்களுக்கு போட்டி போட்டு காட்டுவதற்காகவே நான் இந்த மொடலிங் துறைக்குள் நுழைந்தேன். ஆனால், பின் நாட்களில், இதை எனக்கான அடையாளமாக மாற்றிக்கொள்ள நினைத்து உழைத்தேன்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தமிழராக இந்தத் துறைக்குள் நுழைவதென்பது கடினமான ஒன்று.

அதைக்கடந்து நுழைந்து அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், நமக்காக இடங்கள் கனிந்து விடும். எனக்கும் அப்படித்தான். ஆரம்பத்தில் நிறைய போராடினேன்; பின்நாட்களில் என் குடும்பத்தினர் சில நண்பர்களின் உதவியோடு இந்தத் துறைக்குள் நிலைக்கவும், தொடர்ந்து போராடி முன்னே செல்லவும் முகிறது என்று சிரிக்கிறார் ஜெரோஷன்.

இப்பொழுது, இலங்கை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு டைட்டிலை கைப்பற்றி விட்டேன். இது போதாது. அடுத்த வருடம் ஜூன் அளவில் சீனாவில், Mr Ocean 2018 நடைபெறவுள்ளது. அதை எனதாக்கும் முயற்சிகளிலேயே இறங்கியிருக்கிறேன்.

எனைத்துநீண்ட நாள் ஆசை கனவு, உழைப்பு எல்லாமே இதை நோக்கியதாகவே இருக்கிறது. மெய்ப்படுமென்று நினைக்கிறேன். அதற்காகவே, கடும் உழைப்பில் இருக்கிறேன் என்கிறார் நம்பிக்கையோடு!!

இந்த டைட்டிலை கைப்பற்றியதும் என்னென்ன திட்டங்கள் எதிர்காலத்தில் என்றதற்கு, நிச்சயம் நிறைய உண்டு. கிடைக்கும் பெயர், புகழ், வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் சேர்த்து மாணவர்கள், வாழ்வாதாரத்தில் பின்தங்கியவர்கள், நோயாளர்களுக்காக நலத்திட்டங்கள், உதவி நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.

அதுவும் கூடிய சீக்கிரத்தில் நடைபெறும் என்று அசையாத நம்பிக்கையுண்டு என்னும், இந்த இருபத்து மூன்று வயது இளைஞர், எதிர்காலத்தை தனக்கானதாக்க போராடுகிறார்.

இந்த உறுதியான பயணம், இவருக்கும், தமிழுக்கும் இன்னும் நிறைய வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று வாழ்த்துக்களோடு விடைபெற்றோம்.

நேர்காணல் - இராமசாமி ரமேஷ்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top