Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
நடிகர் சத்யராஜை பிரமிக்க வைத்த விஜய் தேவரகொண்டா - "நோட்டா"

Sooriyan Gossip - நடிகர் சத்யராஜை பிரமிக்க வைத்த விஜய் தேவரகொண்டா - "நோட்டா"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

802 Views
தெலுங்குத் திரையுலக நட்சத்திரமும்,  தனது திரைப்படத்தில் இடம்பெற்ற 'இங்கிம் இங்கிம் இங்கிம் காவலே' என்ற ஒரே ஒரு பாடல் மூலமாக அண்மையில் தமிழ் ரசிகர்கள் எல்லோருக்கும் அறிமுகமானவருமான அழகிய நடிகர் விஜய் தேவரகொண்டா. 

"அர்ஜுன் ரெட்டி" என்ற தெலுங்கு திரைப்படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியின் மூலம் டொலிவூட் ரசிகர்களின் இதயம் வென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா, தற்போது "நோட்டா" என்ற நேரடி தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழ் ரசிக ரசிகைகளின் இதயம் கொள்ளை கொள்ள வரவிருக்கும் நிலையில், "அரிமாநம்பி", "இருமுகன்" படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் "நோட்டா" படத்தின் நாயகிகளாக மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் சன்சனா நடராஜன் பிக் பொஸ் புகழ் யாஷிகா ஆனந்த்துடன், எம்.எஸ்.பாஸ்கர், நாசர் ஆகியோருடன் நடிகர் சத்தியராஜ் முக்கிய வேடமேற்று நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற "நோட்டா" படத்தின் இசை வெளியீடு நிகழ்வில் நடிகர் சத்தியராஜ் பேசும்போது "நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. "அமைதிப்படை", "கோ" என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் டப்பிங் பேசுவது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அழகான தமிழ் உச்சரிப்புடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன்.

நான் இந்த படத்தில் ஜாலியாக நடித்திருக்கிறேன் என்று நாசர் சொன்னார். என்னுடைய 41 வருட சினிமா வாழ்க்கையில், சின்ன மேக்கப் கூட இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். ஆனால், ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்" என்று கூறி மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார் சத்தியராஜ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top