Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
இளவரசி மேகன் மார்க்கல் இந்தளவு எளிமையானவரா ? ஊடகங்ககளில் இதுதான் தலைப்புச் செய்தி

sooriyan gossip - இளவரசி மேகன் மார்க்கல் இந்தளவு எளிமையானவரா ? ஊடகங்ககளில் இதுதான் தலைப்புச் செய்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,551 Views
இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், காரில் இருந்து இறங்கியதும் கார்கதவை தானே சாத்தியமை பெரும் பிரமிப்பை தந்த விடயமாக பார்க்கபடுகிறது. 
குறிப்பாக  இங்கிலாந்து பத்திரிகைகளில் இதான் தலைப்பு செய்தியாக வெளிவந்தமையும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை.

பொதுவாக நாம் காரில் சென்று நாமே எங்கள் கார் கதவை சாத்துவது ஒரு கிக்கும் ஸ்டைல்லும் கூட இயல்பான ஒரு செயலாக பார்க்கிறோம். 
 
ஆனால், ஒரு அரச குடும்பத்தில் இந்த மாதிரி நடைபெற்றால் அது மிகுந்த ஆச்சரியமான ஒன்றாக பார்க்கபடுகிறது. அரச குடும்பத்தினர் கொஞ்சம் சத்தமா சிரித்தாலே அதுவே பெரிய செய்தியாக வந்துவிடும். அவர்கள் ஒவ்வொரு நொடி நேரமும் ஊடகங்களால் அவதானிக்கப்பட்ட வண்ணமே இருப்பார்கள்.  
 
முக்கியமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை.
 
இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹரியின் துணைவி இளவரசி மேகன் மார்க்கல். 
 
இவர், சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் சென்றிருந்தார்.  அவரை கண்டதும் அங்கிருந்த அவர் அபிமானிகளுக்கு அவ்வளவு குதூகலம். 
 
அவரது காரை கண்டதும் அமோக வரவேற்பு ஆரம்பமானது. இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல், இளவரசியே கார் கதவை சாத்திவிட்டார். அந்த நபருக்கும் சுற்றியிருந்தவர்களுக்கும் பெரிய ஆச்சரியம். 
 
இந்த சம்பவத்தை பிரபல சர்வதேச ஊடகங்கள் தமது பிரதான   செய்யில்  தலைப்பு  செய்தியாக பிரசுரித்தன. அத்துடன் இந்த காணொளி காட்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் இந்த சுவாரஸ்ய தகவல்  
 விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. 
 
இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு பகுதியினர் உள்ளனர். 
இங்கிலாந்து அரச குடும்பத்தில்  இளவரசி மேகன் மார்க்கல் மிகுந்த எளிமையானவர். இவர் முன்னர் நடிகையா இருந்தவர். 
 
இந்த நிலையில் இந்த செயற்பாட்டை அவதானித்த பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதி உள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடி உள்ளார்” என்று எழுதி உள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top