தனது மனைவியை கழுத்து அறுத்துக் கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர், ஒரு சட்டத்தரணி என தெரியவந்துள்ளது. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியுள்ளது.
குறித்த மோதலால் கடும் கோபமடைந்த சட்டத்தரணி, தனது மனைவியை கூறிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை சித்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையின் அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.