Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
முன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....???

Sooriyan Gossip - முன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,970 Views
முன்னாள் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது, தமிழ் சினிமாவின் தற்போதைய 'ட்ரெண்ட்' ஆகியிருக்கின்றது. இந்தநிலையில், மறைந்த முன்னாள் தமிழக  முதல்வரும், பிரபல நடிகையுமான ஜெயலலிதா ஜெயராமின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கின்றது.  

முன்னணி நடிகைகள் பலரும் தாங்கள் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெயலலிதாவின் வேடம் தரிப்பதற்கான நடிகை தேர்வில், பிரபல நடிகைகள் பலரையும் பின்தள்ளி அந்த வாய்ப்பை தட்டிச் சென்றிருக்கின்றார் நடிகை நித்யா மேனன். இந்தப் பட வாய்ப்பை பெற்றதன் மூலம் நயன்தாரா, த்ரிஷா உட்பட பல சூப்பர் நட்சத்திரங்களையே பொறாமைப்பட வைத்திருக்கும் நடிகை நித்யா மேனனிடம் அழகாய் சில கேள்விகள்.....

நித்யா மேனன், பொதுவான குணவியல்வு எப்படி...?
ரொம்ப இயல்பாக இருப்பேன். சாப்பாடு, தங்கும் இடம், சூழ்நிலை இதுக்கெல்லாம் ரொம்ப விட்டுக் கொடுத்துப் போகும் பொண்ணு நான். அதேசமயம் ரொம்பவே சென்சிட்டிவான பொண்ணும் கூட.

தேர்வு செய்து நடிக்கிறீர்களே....நிறையப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லையா...?
படத்தின் கதை எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட கதை உள்ள படங்களில் மட்டும் நடிக்க சம்மதிக்கிறேன். இந்த வி‌ஷயத்தில் நான் எடுத்த முடிவு இதுவரை தப்பானதில்லை. நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நான் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல கதை அமையுறது இயல்பாகவே நடந்துடுது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பற்றிய உங்கள் கருத்து....?
நான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் சூர்யா. அவர்கூட வேலை செய்யறப்ப அவ்ளோ பாசிட்டிவ்வா இருந்துச்சு. துல்கரும் நானும் நல்ல நண்பர்கள். விஜய் சார் ரொம்ப அமைதி. இருக்கிற இடமே தெரியாதபடி இருப்பார். அவ்வளவா பேசமாட்டார். விக்ரம் மாதிரி நடிப்புக்கு மெனக்கெடும் யாரையும் நான் பார்த்தது இல்லை. கேரக்டருக்காக தன்னை மாற்றி கொள்ளும் வி‌ஷயத்தில் அவர் கில்லாடி. அவரை மாதிரி நடிக்க ஆசைப்படுகிறேன்.

சரி, நடிகைகளில் உங்களின் நெருக்கமான தோழி யார் என்றால்....???
நடிகை ரோகிணி இருக்காங்க. சென்னை வந்தால் அவங்க வீட்டில் தான் இருப்பேன்; சாப்பிடுவேன். எனக்கு கொஞ்சம் நெருக்கமான தோழி அவங்க.

நடிப்பு தவிர்ந்த மேலதிக திறமைகள் ஏதேனும்......???
முதல்ல நான் பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். நான் படிச்சதே ஜார்னலிசம் தான். ஜார்னலிசத்துல புதுப்புது ஐடியா பண்ணணும்னு தான் படிச்சேன். அப்புறம் ஒளிப்பதிவாளர் ஆகணும்னு ட்ரை பண்ணேன். நடிக்கணுங்கிற எண்ணமே வந்தது கிடையாது. இப்ப இயக்குனர் ஆக ஆசை இருக்கு. உண்மை சம்பவங்களை படங்களா எடுக்க திட்டம் இருக்கு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top