Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
"சர்கார்" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......? - அரசியல் சதுரங்கம்.

Sooriyan Gossip - "சர்கார்" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......? - அரசியல் சதுரங்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,160 Views
நேற்றைய தினத்திலிருந்து சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றையும் அதிர வைத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் எதுவென்றால் "சர்கார்" இசை வெளியீடும், அதில் 'இளைய தளபதி' விஜய்யின் எதிர்கால அரசியலுக்கான அடித்தளமான அரசியல் சார்ந்த பேச்சும் தான்.

இசை வெளியீடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, உண்மையில் ஒரு புதிய அரசியல் கட்சி ஒன்றின் அங்குரார்ப்பண வைபவம் போலவும், மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகளினதும், இதர அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும், மக்கள் விரோதப் போக்கையும் மறைமுகமாக சாடக்கிடைத்த ஒரு வாய்ப்பாகவே சினிமாவை மட்டும் நேசிப்பவர்களால் இந்த மேடை நிகழ்வு பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம். - 'Sun pictures'
கடந்த பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்த இந்திய மக்களாலும் ஒரு பக்கமாக ஒதுக்கி தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் தனியொரு குடும்பத்தின் பிடிக்குள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தமிழக மக்கள் ஆட்சியிலிருந்து தூக்கி வீசியிருந்தனர். இவ்விரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து செய்த ஊழல்களாலும், பொதுமக்கள் விரோத போக்கினாலும் தற்போது வரைக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை மன்னிப்பதற்கு தயாரான மனநிலையில் இல்லை என்பதே உண்மை.

இந்தநிலையில், "சர்கார்" திரைப்படத்தை தயாரித்துள்ள 'Sun pictures' நிறுவனமும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி சார்ந்தோர் என்பதன் காரணமாக, "சர்கார்" திரைப்பட இசை நிகழ்ச்சி அரசியல் மயமாக்கப்பட்டதுடன் 'இளைய தளபதி' விஜய்யின் மிகப்பெரும் ரசிகர் செல்வாக்கையும் தமக்கு சாதகமாக்கி, தமக்கெதிரான மக்களின் எதிர்ப்பை திசை திருப்புவதற்கு சிறப்பாக காய் நகர்த்தியுள்ளனர் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.

நிலை இப்படியிருக்க, திராவிட முன்னேற்றக் கட்சியின் இந்த சித்து விளையாட்டானது 'இளைய தளபதி' விஜய்யிடம் எடுபடவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்றே தான் எண்ணத் தோன்றுகின்றது. காரணம், தற்போது ஆட்சி அதிகாரத்திலுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளை மறைமுகமாக போட்டுத் தாக்கிப் பேசிய 'தளபதி' விஜய் தனது அரசியல் கனவையும், கொள்கைகளையும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது ரசிகர்கள் முன் கொட்டித் தீர்த்திருந்தார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கட்சிகளை விஜய் போட்டுத் தாக்கும்போது கைகளைத் தட்டி மகிழ்ச்சியாக வரவேற்ற கலாநிதி மாறனின் முகம், விஜய் தனது எதிர்கால அரசியல் பற்றிப் பேசுகையில் மாற்றங்களை பிரதிபலித்தமையை காண முடிந்தது. இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

இதேவேளை, இன்னொரு முக்கிய விடயத்தையும் அந்த நிகழ்வில் அவதானிக்க முடிந்தது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தியா, தளபதி.. தளபதி.. என்று சத்தமாகக் கத்தியதுடன், நீங்கள் அழைத்தால் கட்டாயம் தளபதி வருவார் என பார்வையாளர்களை உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார். இந்த விடயமானது, உண்மையில் மக்கள் விரும்பி வாக்களித்தால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்ராலின் முதல்வராக பதவிக்கு வருவார். அதனை மக்கள் செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதற்காகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்பட்டது என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

அதாவது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் பொதுவாக 'தளபதி' என்ற வார்த்தை தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்ராலினை குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவராக கலைஞர் மு.கருணாநிதி இருந்தபோது, கட்சியை காப்பாற்றும் தளபதி போன்று செயற்பட்டவர் மு.க.ஸ்ராலின். அவரை முன்னிலைப்படுத்தியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோ என்ற ஐயப்பாட்டையும் நடந்து முடிந்த "சர்கார்" இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top