Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
இதோ உங்களுக்கான குருபெயர்ச்சி பலாபலன்கள்

Sooriyan Gossip - இதோ உங்களுக்கான குருபெயர்ச்சி பலாபலன்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,673 Views
12 ராசிகளின் பலன்கள்  வழங்கியவர், ஜோதிட சிம்ம சூரியர், கம்பளை ராம சோமஸ்கந்த குருக்கள் அவர்கள்.  

வாக்கிய பஞ்சாங்கப்படி,விளம்பி வருடம், புரட்டாசி மாதம் ,18 ஆம் நாள், 4.10.2018 வியாழக்கிழமை இரவு 9.42 அளவிலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, விளம்பி வருடம், புரட்டாசி மாதம், 25 ஆம் நாள் 11.10.2018 , வியாழக்கிழமை, இரவு 7 .20 அளவிலும் குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன்படி 12 ராசிகளுக்கான பலன்கள்

மேடராசி...

திறமையாக செயற்படும் எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களுக்கு- குருபகவான் 8 ஆம் இடமாகிய விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நற்பலன்கள் குறைந்து காணப்படும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் தாமதமாகும். உடல் நிலை பாதிப்பு, தொழில் பின்னடைவு, கருத்து வேறுபாடுகள், கொடுக்கல் வாங்கல்களில் பிணக்கு போன்றவை ஏற்படும்.
*பரிகாரம்*- வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு,தட்சணாமூர்த்தி வழிபாடு,முருகன் வழிபாடு என்பன சிறந்த பலன் தரும்.

இடப ராசி....

முன்னின்று உதவி செய்யும் இடப ராசியினரே, குரு பகவான் 7 ஆம் இடமாகிய கலஷ்த்திர ஸ்தானத்திற்கு வருவதால் அட்டம சனியில் பாதிப்பு குறையும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். எதிர்ப்புக்கள் நீங்கி நட்புறவுகள் தொடரும். இருப்பினும் 8 இல் சனி இருப்பது சில இடையூறுகளையும், காலதாமதங்களையும் ஏற்படுத்தும்.
*பரிகாரம்*- சனிக்கிழமைகளில் சனி,மகாவிஷ்ணு வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மிதுன ராசி....

அன்புள்ளம் கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு, குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு வருகிறார். நல்ல வாய்ப்புக்கள், நல்ல மனிதர்களின் அறிமுகம் போன்றவற்றை தவற விடுதல், அலட்சியமான மனப்பான்மை, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு,வேலைப்பளு அதிகரித்தல்,நேரமின்மை போன்ற பலன்கள் இருக்கும். 7 இல் சனி இருப்பது நல்லதல்ல.மன சஞ்சலம்,உடல் சுகயீனம், வீண் அலைச்சல் போன்ற பலன்கள் இருக்கும்.
பரிகாரம்- சனி,மகாவிஷ்ணு,குரு,தட்சணாமூர்த்தி வழிபாடு நல்ல பலன் தரும்.

கடக ராசி....

விடா முயற்சியும், செயற்திறனும் கொண்ட கடக ராசியினரே, குரு பகவான் 5 ஆம் இடமான பஞ்சமஸ்தானத்தில் சஞ்சரிப்பது, அற்புதமான அமைப்பாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு காரியம் கைகூடும். தம்பதிகளுக்கும் அன்னியோன்யம், புத்திர பாக்கியம்,பகை நீங்குதல்,நண்பர்களின் ஆதரவு,பொருளாதாரத்தில் மேன்மை, சொத்துக்கள் சேர்த்தால், வியாபாரத்தில் லாபம் போன்றவை ஏற்படும். தேக ஆரோக்கியம் சிறிது குறையும்.
*பரிகாரம்*- அம்பாள் வழிபாடு

சிம்ம ராசி.....

எதிலும் துணிந்து நின்று போராடும் சிம்ம ராசி அன்பர்களே, குரு பகவான் புகார் ஸ்தானமாகிய 4 ஆம் வீட்டிற்கு வருவது அனுகூலமான அமைப்பு என்று சொல்ல முடியாது.கொடுக்கல் வாங்கல்களில் அவதானமாக இருப்பது நன்மை ஆகும். முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். வருமானம் நன்றாக இருப்பினும் ஆடம்பர செலவுகள், பூமி லாபம்,பொன்,பொருள் சேர்தல்,பதவி உயர்வு போன்றவை இருக்கும். வயிறு சம்மந்தமான ரோகங்கள் தோன்றி மறையும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
*பரிகாரம்*- சிவ வழிபாடு

கன்னி ராசி....

நற்பண்பு கொண்ட கன்னி ராசியினரே, குரு பகவான் 3 ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதக அமைப்பாக இருக்காது. தொழில் உத்தியோக நெருக்கடி,வருமானத்தில் மந்த நிலை, மருத்துவ செலவு, மன நிம்மதி குறைவு, கொடுக்கல் வாங்கலில் அவதானமாக இருப்பது நன்மையாகும். 4 இல் சனி இருப்பதும் நல்லதல்ல.
பரிகாரம்- சனி,குரு,விஷ்ணு வழிபாடு நன்மையான பலன்களைத் தரும்.

துலா ராசி...

எதையும் சமூக விதமாக கையாளும் துலா ராசியினரே, குரு பகவான் தன ஸ்தானமாகிய 2 ஆம் இடத்தில சஞ்சாரம் செய்வது பொருளாதாரத்தில் மிக சிறப்பான பலன்களைத் தரும். பொருள் வியாபாரம் நல்ல பலன் தரும்,சுப காரியங்கள் நடக்கும், தம்பதிகள் உறவு மேம்படும்,கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல்,நற்பெயரை சம்பாதித்தல் போன்றவை ஏற்படும். 3 இல் சனி இருப்பது மேலும் நல்ல பலனைத் தரும்.
*பரிகாரம்*- ஆஞ்சநேயர் வழிபாடு அதீத நன்மைத் தரும்.

விருச்சிக ராசி....

எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யும் விருச்சிக ராசியினரே, குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நற்பலன்கள் குறைந்து காணப்படும். ஆடம்பர செலவு,கடன் அதிகரிப்பு,உடல் ஆரோக்கியம் பாதிப்பு, கருத்து வேறுபாடுகள்,வீண் அலைச்சல்கள்,கொடுக்கல் வாங்கல்களில் மிக அவதானமாக இருப்பது நல்லது.2 ஆம் இடத்தில் சனி இருப்பது நல்லதல்ல.
பரிகாரம்- சனி,குரு,முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு ராசி...

எதிலும் சிந்தித்து செயற்படும் தனுசு ராசியினரே, குருபகவான் வெளியூர் ஸ்தானமாகிய 12 ஆம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் உத்தியோகம் வருமானம் ஆகியன மந்த நிலையில் இருக்கும். வீண் அலைச்சல் ,வீண் செலவுகள் கருத்து வேறுபாடுகள்,முன் கோபம் போன்ற பலன்கள் இருக்கும்.ஜென்ம சனியில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
பரிகாரம்- சனி,குரு,சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகர ராசி...

உயர்ந்த லட்சியம் கொண்ட மகர ராசியினரே, குரு பகவான் லாப ஸ்தானமாகிய 11 ஆம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதொரு அமைப்பாகும். சகல தடைகளும் நீங்கி வருமானம் சிறப்பாக அமையும். கடன் சுமை குறையும்,வீடு வாகனம், பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். எதையும் அனுசரித்து போனால் வெற்றி மேல் வெற்றியாக கிடைக்கும். 12 இல் சனி இருப்பது தேக ஆரோக்கியம் குறையும்.
பரிகாரம்-சனி,விஷ்ணு வழிபாடு

கும்ப ராசி....

உயர்ந்த பண்பான இதயம் கொண்ட கும்ப ராசி அன்பர்களுக்கு, குரு பகவான் ஜீவன ஸ்தானமாகிய 10 ஆம் இடத்தில் இருப்பது, பொருள் வியாபாரத்தில் போட்டி,மறைமுக எதிர்ப்பு இருக்கும். ஆடம்பர செலவு, இடமாற்றம் புதிய ஸ்தானங்கள் கிடைத்தல், காரியங்கள் தாமதமாக நிறைவேறும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.அந்நிய தேச பிரயாணம் ஏற்படும். 11 இலை சனி இருப்பது ஓரளவு நல்ல பலன்களைத் தரும்.
பரிகாரம்-குரு,சிவ வழிபாடு நன்மை தரும்.

மீன ராசி...

வசீகரிக்கும் தன்மை கொண்ட மீன ராசி அன்பர்களே, குரு பகவான் பாக்கிய ஸ்தானமாகிய 9 இல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும்.தொழில் வியாபாரம்,வருமானம் சிறப்பாக அமையும். எடுத்த காரியம் நிறைவேறும்,வாகன யோகம், வியாபார மேன்மை, நண்பர், உறவினரின் உதவி,ஆதரவு வாக்கு வன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்பன ஏற்படும். இருப்பினும் 10 இல் சனி இருப்பதால் உடல் நிலை பாதிக்கும். ஆடம்பர செலவுகள் போன்றவை இருக்கும்.
பரிகாரம்- சிவன்,சனி வழிபாடு நன்மை தரும்.
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top