Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
சிம்பு & சுந்தர் சி படத்தின் அடுத்த அப்டேட்

Sooriyan Gossip - சிம்பு & சுந்தர் சி படத்தின் அடுத்த அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

640 Views
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்தின் இரண்டாவது பாதி படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 17-ம் திகதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், சில நாட்கள் பிரேக் விடப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் ‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் இணைந்து தான் நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார் சிம்பு.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top