Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
ஜோதிகா பிறந்தநாளுக்கு காற்றின் மொழி வெளியாகாது ; இரசிகர்கள் கவலை

Sooriyan Gossip - ஜோதிகா பிறந்தநாளுக்கு காற்றின் மொழி வெளியாகாது ; இரசிகர்கள் கவலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,000 Views
‘காற்றின் மொழி’ படம் இந்த மாதம் ரிலீஸாகாததால், ஜோதிகா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் திகதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி மொத்தப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 18-ம் திகதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ஜோதிகா பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அக்டோபர் 17-ம் திகதி தனுஷின் ‘வடசென்னை’, 18-ம் திகதி விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘திருப்பதிசாமி குடும்பம்’, ‘அண்டாவ காணோம்’, ‘எழுமீன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. எனவே, ‘காற்றின் மொழி’ படத்துக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இதனால், அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளிக்குப் பிறகு ‘காற்றின் மொழி’ ரிலீஸாகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனஞ்ஜெயன். 

ஜோதிகாவின் பிறந்த நாளுடன் சேர்த்து, ‘காற்றின் மொழி’ ரிலீஸையும் கொண்டாடலாம் என நினைத்த ஜோதிகா ரசிகர்கள் இதனால் சோகத்தில் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top