Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
அரசியல் களத்தில் நடிகர் சூர்யா - சாதிப்பாரா.....???

Cinema - அரசியல் களத்தில் நடிகர் சூர்யா - சாதிப்பாரா.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

811 Views
அடுத்தடுத்து வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவு  வெற்றியை தரவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் தயாரிப்பாளர்களை காப்பாற்றுவதால், இன்னும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய வசூல் நடிகராக வலம் வருகின்றார் சூர்யா.  

அண்மையில் வெளியான சில படங்கள் சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யாவிட்டாலும், ரசிகர்கள், குறிப்பாக பெண் ரசிகைகளின் வட்டம் இன்னும் இன்னும் பெரிதாகிக்கொண்டே தான் போகின்றது. அதேபோல், பல படங்கள் அடுத்தடுத்து வரிசையில் வெளியாகவுள்ள நிலையில், வரவிருக்கும் படங்கள் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றார்கள் சூர்யா ரசிகர்கள்.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் "NGK" என்ற புதிய படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்தப் படம் தைப்பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அந்தப் படத்தை ரசிகர்கள் பெருமெடுப்பில் கொண்டாடவுள்ள நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இன்னமும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 2019 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட்டு வசூலை வாரிக்குவிக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இது வரைக்கும் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தின் கதை தொடர்பிலோ, சூர்யா ஏற்றிருக்கும் பாத்திரம் தொடர்பிலோ எவ்வித செய்திகளும் கசிந்திடவில்லை. காரணம், படப்பிடிப்பு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றது. இருந்தும், மோகன்லால், சாயிஷா, ஆர்யா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கின்றது இந்தப் படம்.

இது இப்படியிருக்க, அண்மையில் மோகன்லாலுடன் சூர்யா சேர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியானதன் மூலம், தற்போது படத்தின் கதை தொடர்பில் மெதுவாக செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதும் அவரது பாதுகாவலராக சூர்யா நடிப்பதும் உறுதியாகியிருப்பதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

செல்வராகவன் இயக்கத்தில் "NGK" படமும் அரசியல் சார்ந்த கதையாகவுள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கும் படமும் அரசியல் தொடர்பான கதையாகவே அமைந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top