Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
31 பேரை அடிமையாக வைத்திருந்த 3 பேருக்கு என்ன நடந்தது தெரியுமா?

sooriyan gossip - 31 பேரை அடிமையாக வைத்திருந்த 3 பேருக்கு என்ன நடந்தது தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,116 Views
இந்தியாவின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் கல்குவாரிகள் தனியாரினால் நடாத்தி செல்லப்படுகின்றன. 
இங்கு 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த 3 பேர், காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த  நிலையில், அவர்கள் மூவருக்கும் 11 வருடங்கள் சிறை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.  
 
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த  2012 பெப்ரவரி மாதம் 10ம் திகதி ராஜகோபால்  என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா பெரும்படுகை கண்ணிகை கிராமத்தை சேர்ந்த 31 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தமை தெரியவந்து. 
 
இதில் சிலர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கல்குவாரி உரிமையாளர் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபா முன்பணமாக கொடுத்து வேலைக்கு அழைத்து வந்துள்ளார். 
 
அதனை தொடர்ந்து பல மாதங்களாக இவர்கள் இங்கு கொத்தடிமைகளாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அங்குள்ள காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  கல்குவாரி உரிமையாளர்களான ராஜகோபால்(46), இவரது மகன் சுதாகர்(24) மற்றும் காஞ்சிபுரம் சந்திரசேகர்(51) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 
 
இதன் பிரகாரம், வழக்கு நடைபெற்று வந்த நிலையில் குறித்த மூன்று பேருக்கும்  11 ஆண்டுகள் சிறை தண்டனையும், கிட்டத்தட்ட 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top