Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனநிலையில் மாற்றம் தந்த குழந்தை - 'மெடினா அட்னன் சமி'.

Sooriyan Gossip - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனநிலையில் மாற்றம் தந்த குழந்தை - 'மெடினா அட்னன் சமி'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,299 Views
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள "2.0" திரைப்படம் வெகு விரைவில் திரை காணவுள்ளது. 560கோடி இந்திய ரூபா செலவில்  படமாக்கப்பட்டுள்ள "2.0" படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில், லண்டனில் உள்ள இசைக்கூடத்தில் படத்திற்கான பின்னணி இசை மற்றும் இசைக்கோர்ப்பு வேலைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை வழங்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் தனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை தவறவிடாது, அழைப்பை ஏற்றிருந்த நிலையில், குறித்த தொலைபேசி அழைப்பானது இந்தித் திரையுலகைச் சேர்ந்த பின்னணிப் பாடகரும், இசைப்புயலின் நண்பருமான அட்னன் சமியின் தொலைபேசியிலிருந்து தவறுதலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. காணொளி அழைப்பாக வந்திருந்த குறித்த தொலைபேசி அழைப்பை பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தையான மெடினா தவறுதலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேற்கொண்டிருந்தாராம்.

தனது தொலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசும்போது தான், பாடகர் அட்னன் சமியின் குழந்தையால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு என்பதை தெரிந்துகொண்ட இசைப்புயல், அந்த அழைப்பை துண்டிக்காமல் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியிருந்தாராம். இதுகுறித்து, டுவிட்டர் சமூகவலைதளத்தில் பாடகர் அட்னன் சமி பதிவிடும்போது.... "எனது தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்திற்கும் கடவுச்சொல் தரவிடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் தொலைபேசியை எடுத்து, தவறுதலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்திவிட்டார். அழைப்பை ஏற்ற ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தை மெடினாவுடன் பேசியதோடு, லண்டனில் "2.0" படத்துக்கு இசையமைக்கும் கலையகத்தையும் அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், அட்மின் சமியின் குறித்த டுவிட்டர் பதிவிற்கு மறுபதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் "அன்புள்ள அட்னன்... அவளது காணொளி அழைப்பு, எனது எரிச்சலான மனநிலையையும், பணிச் சுமையையும் மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என கூறியிருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top