Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
நிக்கி ஹேலி பதவி துறந்தமைக்கான மர்மம் !

sooriyan gossip - நிக்கி ஹேலி பதவி துறந்தமைக்கான மர்மம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
ஐக்கிய நாடுகள்  சபைக்கான அமெரிக்கத் தூதுவர், எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் திடீரென ராஜினாமா செய்துகொண்டமை அனைவர் மத்தியிலும் பல கேள்விகளை எழ வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி. இவர் தனது ஐ நாவிற்கான தூதுவர் பதவியை நேற்று (09 .10.2018 ) செய்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். 
 
நிக்கி ஹேலி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தவர்களில் ஒருவராகக் காணப்பட்டார். 
 
இந்த நிலையில், தனது ராஜினாமாவை அறிவித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது, "ஐக்கிய நாடுகள் சபையில் தினந்தோறும் அமெரிக்காவிற்காக வாதாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது நாட்டுக்காக நான் சண்டையிடும்போது எந்தத் தருணத்திலும் நான் பின்வாங்கவில்லை. இருப்பினும் இதுதான் நான் விடைபெறுவதற்கு சரியான தருணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். 
 
இது இவ்வாறாக இருக்கும் போது, தனது பணியிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க போவதாக சிறிது காலத்துக்கு முன் நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார் என்று அமரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
"நிக்கி எனக்கு மிகவும் பிடித்தவர் தனது பணியை சிறப்பாக செய்தார். அவர் ஒரு அருமையான மனிதர்"  என்று டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, நிக்கி ஹேலியின் ராஜினாமவை அமெரிக்க அதிபர் ஏற்றுக் கொண்டதாகவும், இந்த முடிவை 6 மாதத்திற்கு  முன்னரே அவர் அறிவித்ததாகவும், வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. 
 
முன்னதாக அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஆளுநராக பதவி வகித்திருந்த நிக்கி ஹேலி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவர்.  
 
46 வயதுடைய  நிக்கி ஹேலி, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 
 
இதில் சிறப்பான விடயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர் போன்ற மேல்மட்ட நிர்வாகப் பதவிக்கு முதன் முறையாக தெரிவு  செய்யப்பட்ட பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 
 
எவ்வாறான போதும், தெற்கு கரோலினா தலைவர்களிடமிருந்து, விலையுயர்ந்த தனியார் விமான பயணங்களை பரிசாக பெற்றுள்ளார் என்ற குற்றசாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த குற்றச்சாட்டை  ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று முன்வைத்துள்ளது. குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மறுநாளே இவர் தனது பதவியை துறந்தமை இவர் மீது சில கேள்விகள் எழவும் காரணம் ஆகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top