Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
சின்மயி கூறுவது உண்மைதான்... நடிகை சமந்தா அதிரடிக் கருத்து...

Cinema - சின்மயி கூறுவது உண்மைதான்... நடிகை சமந்தா அதிரடிக் கருத்து...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

314 Views
அண்மையில் கவிஞர் வைரமுத்து மீது, பத்திரிகையாளர் சந்தியா மேனன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை அடுத்து பாடகி சின்மயியும் இதுகுறித்து தற்போது தீவிரமாகப் பேசி வருகின்றார்.

இந்த நிலையில் பின்னணிப் பாடகி சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைதான் என, நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த விவகாரம் அதிக அளவில் விவாதிக்கப்படவே, பல பிரபலங்கள் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக கூறி வருகின்றனர். அவர்களின் பெயரை மறைத்துவிட்டு அந்த பெண்களின் பதிவுகளை சின்மயி டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சின்மயிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் “ சின்மயி, ராகுல் உங்கள் இருவரையும் 10 வருடங்களாக எனக்கு தெரியும். நீங்கள் உண்மையானவர்கள். உங்களை நேசிக்கிறேன். நீங்கள் கூறுவது உண்மைதான்” என பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top