பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் இதுவரை சுமார் 50,000 பேர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 49,992 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், 2017 ம் ஆண்டு, 35,595 பரிந்துரைகளும், 2016 ல் 18,768 பரிந்துரைகளும், 2010 ல் 1313 பரிந்துரைகளும் பெறப்பட்டன.
கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் இந்த பரிந்துரைக்கான அதிகரிப்பிற்கு காரணம், உயரிய விருதுகளுக்கு நாட்டின் எந்த மூலையில் இருப்பவரின் பெயரும் பரிந்துரைக்க முடியும் என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் Online மூலம் பரிந்துரைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.