Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
#Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.

sooriyan gossip - #Me Too தொடர்பில் மெலானியா ட்ரம்ப்பின் அதிரடி கருத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

144 Views
#Me Too மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் உறுதியான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் என்று மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பணியிடங்கள், பயணங்கள், பிரபல்யங்களை சந்திக்கும் போது பல பெண்கள் பாலியல் ரீதியாக  பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இப்படி பாதிக்கப்படும்  பெண்கள் தமது பாதுகாப்பு மற்றும் அந்தஸ்து போன்ற காரணங்களோடு வேறு சில காரணங்களாலும் இவற்றை வெளியில் சொல்ல முடியாமலுள்ளனர். 
 
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் #Me too இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட  பாலியல் பிரச்சினைகள் தொடர்பில் பெண்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 
 
இந்த #Me too மூலம் பல பிரபல்யங்களின் ரகசிய தவறுகள் பொதுவெளியில் பேசப்படும் விவாத பொருளாக மாறிவிட்டது. 
 
இதில் திரை உலகினர் கலைஞர்கள் என்று பல்வேறு பிரபல்யங்கள் சிக்கியுள்ளனர். 
 
#Me too மூலம் கூறப்படும் குற்ற சாட்டுகளுக்கு ஏற்றுக்கொள்ள கூடியதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் போன்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் #Me Too இயக்கம் குறித்துக் ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ளார் மெலானியா ட்ரம்ப்.
 
அதில், ''Me too இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தகுந்த ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும்.
 
நீங்கள் வெறுமனே, 'நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்', 'அவர் அதைச் செய்துவிட்டார்' என்று கூறக்கூடாது. ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில் சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு  சித்தரிப்பது உண்டு. அது சரியானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top