Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
தல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்

Sooriyan Gossip - தல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,017 Views
தல ஜித் குறித்து இன்ஸ்டாகிராமில் விஜய் மகன் சஞ்சய் பதிவு செய்தாரா என்பதற்கு விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் அஜித் - விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் பெரும் வைரலாகப் பரவும். அதுவும் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாகப் பரவியது.

அதே போல, நேற்று காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின. இதில் ''விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்'' என்பதற்கு ''அஜித் மற்றும் விஜய்சேதுபதி'' என்றும், ''யாருடன் நடிக்க விருப்பம்'' என்பதற்கு ''அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி'' என்றும் பதில்கள் தெரிவிக்க, அது வைரலானது.

மேலும், ''தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா'' என்பதற்கு ''ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்'' என்றும், ''தலயைப் பற்றி'' எனக் கேட்டதற்கு ''கெத்தானவர்'' என்றும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கிறார்கள்

விஜய் மகன் சஞ்சய் அஜித்தைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியிருப்பதால், அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வந்தார்கள். இந்தப் பதில்களைக் கூறியது விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தப் பதிவுகள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ''சமீபகாலத்தில் விஜய் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் அந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலையிலிருந்து பரவிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top