Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
குழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...

Sooriyan Gossip - குழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,238 Views
குழந்தையைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த   தாயைப் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடுமையான ஆலங்கட்டி புயலில் இருந்து போராடி தனது குழந்தையை துணிச்சலாகக் காப்பாற்றிய குறித்த தாயின் தைரியத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என ஏற்கனவே அந்நாட்டு வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது. அதிலும் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை வெளுத்துவாங்கியுள்ளது. கடும் புயலின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் குறித்த பெண், தனது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது கடும் ஆலங்கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. கார் ஓட்ட முடியாத அளவு மழை பொழிய ஆரம்பித்ததால், வண்டியை ஃபியோனா நிறுத்தியுள்ளார். தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை இவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளது.

இதனால் பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்குக் ஆலங்கட்டி பட்டு காயம் ஏற்படும் நிலை உருவானது. உடனே ஃபியோனா பின் சீட்டுக்குத் தாவி, தன் குழந்தையைச் சுற்றி உடலைக் கவசம் போல மூடி உட்கார்ந்துள்ளார். தொடர்ந்து பொழிந்த ஆலங்கட்டி, ஃபியோனாவின் முதுகு, கழுத்து, முகம் என அனைத்தையும் பதம் பார்த்தது.
உடலில் படுகாயம் ஏற்பட்டும், மழை முடியும்வரை ஃபியோனா குழந்தையை விட்டு எழவில்லை. காரில் குழந்தையின் பாட்டியும் இருந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த ஃபியோனா, தன் காயங்களுக்கு நல்ல மருந்து என்ன என்று கேட்டு தனது ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் அனுபவத்தையும் பகிர, உடனே ஊடகங்கள், இந்த வீரத்தாயை பிரபலமாக்கி விட்டன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top