காதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ககஸ்தானில் பதிவாகியுள்ளது.
தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்தமையினால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியின் தலையை இரண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் பலியான பெண், 21 வயதான மருத்துவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்ணைக் கொலை செய்த நபரைக் கைது செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.