கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் பாடகி சின்மயி தற்போது பலரின் பேசுபொருளாக மாறியுள்ளார்.
இவர் வெளியிடும் கருத்துக்களுக்கு பல தரப்பினர் ஆதரவு வழங்குவதுடன், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி பற்றி அவரது கணவர் ராகுல் கருத்து வெளியிட்டுள்ளார்.
''எனது மனைவி எப்போதும் மற்றவர்களை அதிகமாக மதிக்கக்கூடியவர். இந்த விவகாரத்தில் சின்மயிக்கு பலத்த ஆதரவும் கடுமையான எதிர்ப்பும் சேர்ந்தே வருகிறது. ஆனால் எனது மனைவி சின்மயிக்கு எப்போதும் முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன்'' என்று சின்மயியின் கணவர் ராகுல் கூறியுள்ளார்.