Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
வெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...?

Sooriyan Gossip - வெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,199 Views
''உறக்கம்'' நம் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஆடி ஓடி வேலை செய்து, அலுப்படைந்த உடலுக்கு ஓய்வு கொடுக்கும் தருணமாக இந்த உறக்கம் இருக்கிறது.
ஒரு சிலருக்கு உறங்குவதற்கே நேரம் போதாமல் வேலைச் சுமை அதிகமாக இருக்கும். மற்றும் சிலர் உறக்கத்தையே தொழிலாக கொண்டவர்கள் போன்று எந்த நேரமும் தூங்குவார்கள். 
 
உண்மையில் தூக்கம் எமது ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த விடயம்  நம்மில் பலருக்கு புரிவதே இல்லை. 
 
சரி, உறங்கும்போது சரியான முறையில் உறங்குகிறோமா? என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் தானே? 
 
நீங்கள் இருளில் தூங்குகிறீர்களா? அல்லது வெளிச்சத்தில் தூங்குகிறீர்களா? என்பது கூட உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்ற விடயம் முக்கால்வாசி பேருக்கு தெரியாது. 
 
நல்ல இருட்டான அறையில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இவ்வாறு இருளில் தூங்கினால் நின்மதியாக தூங்குவதோடு, பல்வேறு நோய் நிலைகளில் இருந்து நாம் தப்பித்து கொள்கிறோம். குறிப்பாக அடிக்கோடிட்டு சொல்லவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால்....இரவில் இருள் சூழ்ந்த அறையிலோ, ஏதேனும் பகுதியிலோ தூங்கினால், புற்றுநோய் வராது என்று கூறப்படுகிறது. இரவில் நம் உடலில் சுரக்கும் மெலனின்,  புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது.
 
அது மட்டுமன்றி இந்த சுரப்பி காரணமாக மேலும் சில சுரப்பிகள் செயற்பட்டு, மூளையை கூர்மையாக செயல்பட உதவுகிறது. மேலும் மார்பக புற்றுநோய், அல்சைமர் (Alzheimer) மற்றும் இன்சோம்னியா (Insomnia ) போன்ற நோய்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
 
அத்துடன் நாம் இருளில் உறங்கும் போது இலகுவான ஆடைகள் அணிந்து, குறிப்பாக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தூங்க வேண்டும். இதில் பெண்கள் சற்று அதிகம் கவனம் செலுத்தவேண்டும். பொதுவாக இரவு நேர ஆடைகள் அணிந்து தூங்கும் போது, பெண்கள் உள் ஆடைகளை அணிந்து தூங்குவது தவிக்கப் படவேண்டும். இரவு நேரங்களில் உள் ஆடைகள் இன்றி காற்றோட்டமாக தூங்கவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றே. 
 
மாறாக இறுக்கமான ஆடைகள் அணிந்து தூங்குவீர்களாக இருந்தால், உங்கள் உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பு குறைவடையும். இதனால் பாரிய பாதிப்பு நமக்கே. 
 
குழந்தைகள் உள்ள வீடுகளில் எந்தவித வெளிச்சமும் இன்றி உறங்க முடியது. அவர்களுக்காக குறைந்த ஒளியைத் தரும் மின்குமிழை ஒளிரச்செய்தால் நன்று. இதிலும்  குறிப்பாக 
சிவப்பு நிற மின் குமிழை எரிய விடுங்கள். ஏனைய நிற விளக்குகளை காட்டிலும், சிவப்பு நிற விளக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
 
தயவு செய்து தொலைக்காட்சி, தொலைபேசி வெளிச்சத்தில் நீங்கள் தூங்குவது தவிர்த்தே ஆகவேண்டும். ஏன் என்றால் அவை வெளியிடும் புறஊதா கதிர்கள் உங்கள் உடலில் சுரக்கும்  ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். 
 
வெளிச்சத்திற்கு அருகில் தூங்கினாலோ அல்லது வேறு வெளிச்சத்தில் தூங்கினாலோ அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த சமயங்களில் உங்கள் கவனம் அதிகம் தேவை. 
 
விதிவிலக்காக, இயற்கையான வெளிச்சத்தில் தூங்குவது உங்கள் உடலுக்கு நன்மையாக இருக்கலாம். 
 
இந்த நிலையில், சமீபத்திய ஆய்வின்படி, வெளிச்சத்தில் தூங்குவது இருட்டில் தூங்குவது போன்று அமைதியான தூக்கமாக இருக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளிச்சத்தில் தூங்குவது இனியேனும் தவிர்த்திடுங்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top