Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
ஜமாலின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - சவுதி இளவரசர் தெரிவிப்பு

Sooriyan Gossip - ஜமாலின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - சவுதி இளவரசர் தெரிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

353 Views
பிரபல பத்திரிகையாளர் ஜமாலின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammad bin Salman) தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் பத்திரிகையாளர் ஜமால், சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 
 
ஜமாலில் கொலை தொடர்பில் துருக்கி அதிர்ச்சிகர தகவல்களையும் காணொளி ஆதாரங்களையும் வெளியிட்டு, ஜமாலின் கொலையின் உண்மை நிலையை கண்டறிய பெரிதும் முன்னின்றது. 
 
இந்த நிலையில், துருக்கி வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்பைடையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. 
 
எனினும் அண்மையில் ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பேசும்போது, ''சவுதி மக்கள் வேதனைப்படும்படி பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
இந்தக் கொலைக் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனையை  வழங்க தான் துணையாக இருக்கிறேன் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அத்துடன், நீதியே நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்த சவுதி இளவரசர், ஜமாலின் கொலையை பயன்படுத்தி துருக்கிக்கும்  சவுதிக்கும் இடையே மோதல் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதனிடையே, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் கொலை செய்யப்பட்ட  ஜமாலின் கொலை வழக்கில், சந்தேகிக்கப்படும் 15 பேரின் பெயரை துருக்கி கடந்த வாரம்வெளியிட்டது. இவர்கள் அனைவரும் சவுதியை சேர்ந்தவர்கள். 
 
இந்த நிலையில், ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாக தெரிவித்துள்ளது. அத்துடன், இதற்கான காணொளி மற்றும் குரல் பதிவு ஆதாரத்தையும்  துருக்கி வெளியிட்டது.
 
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்திரவதை  செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top