Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
ஒல்லியாகும் முயற்சியில் 'இஞ்சி இடுப்பழகி' - கைவிட்டுப் போகும் பட வாய்ப்புக்கள்.

Cinema - ஒல்லியாகும் முயற்சியில் 'இஞ்சி இடுப்பழகி' - கைவிட்டுப் போகும் பட வாய்ப்புக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,272 Views
தென்னிந்தியத் திரையுலகில் இன்னும் பெரிய அளவில் மின்னிக்கொண்டிருக்கும் பெண் நட்சத்திரம் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனது திறமையின் மூலம் தனி இடமொன்றை தக்கவைத்திருக்கும் அனுஷ்கா, தனது உடற்பருமன் காரணமாக பல வாய்ப்புக்களை இழக்க ஆரம்பித்துள்ளார்.  

பாஹுபலி, பாஹமதி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்து, தனது அதீத நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் இயக்குனர்களாலும், ரசிகர்களாலும் அதிகம் கொண்டாடப்பட்ட அனுஷ்காவை, தற்போது தமது படங்களில் நடிக்க வைக்கத் தயங்குகின்றார்களாம் திரைப்பட இயக்குனர்கள்.

இதன்காரணமாக, தனது உடல் பருமனைக் குறைத்து ஸ்லிம் ஆகும் முயற்சியில் இறங்கியிருக்கும் நடிகை அனுஷ்கா, வெளிநாடு சென்று நவீன மருத்துவ சிகிச்சை மூலம் உடலை ஒல்லியாக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார். இது பற்றியும், இதுவரை தனது சினியுலக பயணம் பற்றியும் அனுஷ்கா கூறுகையில்......

"நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள். என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்கள கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி "இடுப்பழகி" படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை" என்கிறார் நடிகை அனுஷ்கா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top