Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
கூட நடித்த நாயகர்களில் சிறந்த நடிகர் யார்....??? - மனம் திறக்கும் நடிகை ஜோ...

Cinema - கூட நடித்த நாயகர்களில் சிறந்த நடிகர் யார்....??? - மனம் திறக்கும் நடிகை ஜோ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,256 Views
தமிழ்த் திரையுலகில் நடிகைகளைப் பொறுத்தவரைக்கும் திருமணத்தின் பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பதென்பது குதிரைக்கொம்பு விடயமே. இருந்தும் ஒரு சில திறமை வாய்ந்த நடிகைகளால் வயது, திருமணம் போன்ற காரணிகள் கடந்து இன்னமும் திரையுலகில் நட்சத்திரங்களாக மின்ன முடிகின்றது. அந்த வரிசையில் தற்போது முன்னிலையில் இருப்பவர் நடிகை ஜோதிகா.

நடிகர் சூர்யாவுடனான காதல் திருமணத்தின் பின்னர் சில காலம் திரைவானில் மின்னாமல் வீட்டில் இல்லத்தரசியாக இருந்து, தற்போது திரையுலகிற்கு மீள்பிரவேசம் பண்ணியிருக்கும் நடிகை ஜோதிகாவை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடத் தவறவில்லை. அந்த வகையில், கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் பட வரிசையில் அடுத்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது "காற்றின் மொழி" திரைப்படம்.

ராதாமோகன் இயக்கத்தில் படமாகியிருக்கும் "காற்றின் மொழி" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில், நடிகை ஜோதிகா கலந்துகொண்டிருந்த நிலையில், அந்தப் படம் பற்றியும், திரையுலகம் சார்ந்த விஷயங்கள் பற்றியும் கூறுகையில்.....

"ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. "காற்றின் மொழி" திரைப்படம் கதாநாயகியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்ணை பற்றிய ஒரு கதை இது. பெண்மையை உயர்வாகக் காண்பிக்கின்ற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை நான் பெருமையாக எண்ணுகின்றேன்.
இந்த கதையில் எனக்குப் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.

"மொழி" படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகும் இயக்குனர் ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் எனக்குத் தோன்றவில்லை. அதே நேர்மறையான உணர்வு தான் இன்னும் உள்ளது. "மொழி" திரைப்படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தன.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் விதார்த் கூட ஜோடியாக நடித்திருக்கின்றேன். ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சௌகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் ஆகியோருடன் நடித்தபோது நான் அதை உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்குப் பின்னர் இப்போது விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.

"காற்றின் மொழி" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக "36 வயதினிலே" திரைப்படம் அமைந்தது. இருந்தும், வரவிருக்கும் இந்த "காற்றின் மொழி" படம் அதையும் தாண்டும்" என்று மனம் திறந்தார் நம்ம ஜோ.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top