Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் அதிகமாகிவிட்டது - மனம் திறந்தார் விதார்த்

Sooriyan Gossip - ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் அதிகமாகிவிட்டது - மனம் திறந்தார் விதார்த்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,058 Views
நடிகை ஜோதிகா நடித்துள்ள ''காற்றின் மொழி'' திரைப்படத்தில் அவரின் கணவராக நடித்தவர் நடிகர் விதார்த்.
வித்யா பாலன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ''துமாரி சுலு'' என்ற  ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்  ''காற்றின் மொழி''.
 
தமிழில் ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ரேடியோ ஜோக்கியாக ஜோதிகா நடித்துள்ளார். 
 
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விதார்த், இந்த படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டதும்  ஒத்துக்கொண்டேன். காரணம் என் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. அவருடன் நடிக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகினேன். 
 
ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போது, ஏன் நான் ஒப்புக் கொண்டேன்? என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
 
கொஞ்சம் பயத்துடனேயே படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. 
 
ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க வேண்டும். அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது? என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. 
 
ஆனால், என் பயத்திற்கு மேலாக, முதல் டேக்கிலேயே சரியாக வந்தது. அதேபோல், படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படிப் பழகுவார்? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாகப் பழகினார்.
 
இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால், அதற்கு ''ஜோ'' தான் காரணம். 
 
மேலும் இனி வரும் படவாய்ப்புக்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடனமாடியிருக்கிறேன் என்றும் நெகிழ்ந்துள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top