Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
''நாற்று நடும் '' விசித்திர போராட்டம் - நியாயமான கோரிக்கையை முன்வைக்கும் பெண்கள்

Sooriyan Gossip - ''நாற்று நடும் '' விசித்திர போராட்டம் - நியாயமான கோரிக்கையை முன்வைக்கும் பெண்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

310 Views
இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தில்  சுமார் 20  வருடங்களாக சீர்திருத்தப்படாத வீதியில் ''நாற்று நடும் '' விசித்திர போராட்ட த்தை அங்குள்ள பெண்கள் நடத்தியுள்ளனர். 
குறித்த வீதியை பயன்படுத்தும் 100க்கும் அதிகமான வீடுகள் அந்தப்பகுதியில் உள்ளன.  கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் அந்த வீதி அமைக்கப்பட்டது. அதன்பின் அந்த வீதி மிகுந்த பாதிப்பு அடைந்த நிலையில், அதை புதுப்பிக்க அதிகாரிகள் கவனம் எடுக்கவில்லை. 
 
தற்போது அங்கு  தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்த வீதி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. 
 
மேலும் மழை நீரும், சகதியும் சேர்ந்து வீதியில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் மனுக்களை அதிகாரிகளுக்கு கையளித்திருந்தபோதும், எந்த வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கப்படவில்லை. 
 
இதன்காரணமாக  அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு, சகதிக் காடாக காட்சியளித்த வீதியில்  நாற்று நடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 
 
அவர்கள் கூறுகையில், '' எங்கள் வீடுகளுக்கு செல்லும் பாதை சகதிக் காடாக இருப்பதால், நடந்து செல்ல முடியவில்லை.  சகதியில் சாக்கடை நீரும் சேர்ந்து விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.எங்கள் வீதியை மட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. இனிமேலாவது எங்கள் வீதியை புதுப்பிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றும்  தெரிவிக்கின்றனர். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top