Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
கடலில் மிதந்து வந்த அதிசயக் குழந்தை

Sooriyan Gossip - கடலில் மிதந்து வந்த அதிசயக் குழந்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,863 Views
பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீனவர் ஒருவர் மீட்டமை நியூஸிலாந்தில் நிகழ்ந்துள்ளது.
நியூஸிலாந்து வடக்கு தீவு ஒன்றில் உள்ள மடாடா கடற்கரையில் ''கஸ் ஹட் " என்பவர் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்துள்ளார்.
 
அப்போது கடலில் ஏதோ ஒரு பொருள் மிதந்து வருவதை அவர் அவதானித்துள்ளார். மிதந்து வந்த பொருளை முதலில்  பொம்மை என நினைத்தவர் பின்னர்தான் அது குழந்தை என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 
 
மிதந்து வந்தது ஒரு ஆண் சிசு. 
 
''கஸ் ஹட்'' பொம்மை என்று நினைத்து அருகில் சென்று பார்க்கும் போது, அது கைகால்களை தூக்கி அசைத்துள்ளது. அத்தோடு, கொஞ்சம் அழுகைச் சத்தமும் கேட்டுள்ளது. 
 
அப்போதுதான் கடலில் மிதந்து வந்தது ஆண்குழந்தை என்பதை அவர் கண்டறிந்துள்ளார். 
 
என்ன அதிசயம் கடலில் மிதந்து வந்த குழந்தை உயிருடன் இருந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அவரை ஆக்கிரமிக்க, இறைவா குழந்தை உயிரோடு இருக்கிறான் என்று நன்றி கூறியுள்ளார். 
 
இந்த நிகழ்வில் ஆச்சரியம் என்னவென்றால், ''கஸ் ஹட்'' வழக்கமாக பொழுதை கழிக்கும் இடத்திற்கு செல்லாமல், வேறு இடத்திற்கு மீன் பிடிக்க சென்றிருந்தார். அதனால்தான், அவரால்  குழந்தையை காப்பாற்ற முடிந்ததுள்ளது.
 
இந்த நிலையில், குழந்தை கடலிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிந்ததும், குழந்தையின் தாய் அச்சத்தில் கதறியுள்ளார்.  
 
குழந்தையின் பெற்றோர் அந்த கடற்கரை பகுதியில்  தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் குழந்தை தவறியுள்ளது. 
 
அந்த குழந்தை இப்போது நலமாக இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். 
 
எது எப்படியோ கடலில் மிதந்து வந்த குழந்தை உயிரோடு இருந்தமை மிகுந்த ஆச்சரியத்தை அனைவருக்கும் தந்துள்ளது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top