Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
ஆஜராக முடியாது - பேஸ்புக் நிறுவுனர் உறுதி - இனி என்ன நடக்கப்போகுதோ?

Sooriyan Gossip - ஆஜராக முடியாது - பேஸ்புக் நிறுவுனர் உறுதி - இனி என்ன நடக்கப்போகுதோ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,110 Views
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆஜராக முடியாது என்று, பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 
நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவுனரை முன்னிலை ஆகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு ஆஜராக முடியாது என்று மறுதலித்துள்ளார். 
 
அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல்  நடைபெற்றது. இதன்போது தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica ) என்ற நிறுவனம் மேற்க்கொண்டது. 
 
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா  நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை திருடி, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 
 
இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடியது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் விளக்கம் அளித்தார். 
 
பின்னர், ஊடகவியலாளர்கள் முன் விளக்கமளித்த அவர், 
உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில், பேஸ்புக் உருவாக்கப்பட்டதாகவும், அதில் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை  பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்றும் கூறினார். 
 
மேலும் தேர்தலில் தலையீடு, போலியான செய்திகள் வெளியிடுதல் போன்ற தவறுகள் நடந்துவிட்டதாவும், இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றும் மன்னிப்பு கோரினார். 
 
ஆனாலும் அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 
 
இந்நிலையில் பேஸ்புக் நிறுவுனர் ஆஜராக முடியாது  என்று கூறியுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top