Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
தீபாவளி தினத்தில் அரங்கேறிய கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது

Sooriyan Gossip - தீபாவளி தினத்தில் அரங்கேறிய கொடூரம் - ஒரு உயிர் பறிபோனதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

485 Views
சென்னை- பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சந்தீப்குமார் என்ற வாலிபரை, 5 பேர்கொண்ட கும்பல், இரக்கமின்றி குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தீபாவளி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை, 5 பேர்கொண்ட  கும்பல் ஒன்று நடு வீதியில் பட்டாசு கொளுத்துவதில் ஈடுபட்டுள்ளது. 
 
நடுவீதியில் பட்டாசு கொளுத்துவது தவறு என்பதால், சந்தீப்குமார் என்ற வாலிபர் இந்த செயலை நிறுத்தும்படி ஆட்சேபித்துள்ளார்.  
 
கும்பலில் உள்ளவர்கள் வன்முறையாளர்கள் என்பது பாவம் சந்தீப்குமாருக்கு தெரியாது. 
 
இந்த நிலையில் ஆவேசம் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சந்தீப்குமாரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர். 
 
இந்த கொடூரம் தொடர்பில், காவல் துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர். 
 
மேலும் இவர்கள் ஐவர் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பிரபு, ராகுல் ஆகியோர் அடங்கிய கும்பல் பட்டாசு வெடித்ததும், இக்கொலையை தொடர்ந்து அந்த கும்பல் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது. 
 
அதே நேரம், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top