Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
தீபாவளி தினத்தில் குழந்தையின் வாயில் பட்டாசு போட்ட கொடூரம் - குழந்தை உயிருக்கு ஆபத்து

Sooriyan Gossip - தீபாவளி தினத்தில் குழந்தையின் வாயில் பட்டாசு போட்ட கொடூரம் - குழந்தை உயிருக்கு ஆபத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

851 Views
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில், பட்டாசு வைத்து இளைஞர் ஒருவர் வெடித்தமையினால் குழந்தையின் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதென அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
இந்த நிலையில், படுகாயமடைந்துள்ள சிறுமியின் வாயில் 50 தையல்கள் போடப்பட்ட நிலையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
 
உத்தரப்பிரதேச மாநிலம், மிலாக் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். அவரது 3 வயது மகள் தவுராலா. சிறுமி தவுராலா வீதியில் தீபாவளி தினத்தில் பட்டாசு கொளுத்தி கொண்டாடும் நிகழ்வை ரசித்துக்கொண்டு இருந்துள்ளார்.
 
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் ஒருவர் சிறிதும் யோசிக்காது, சிறுமியின் வாயில் ''சுல்டி'' பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.
 
இந்த பட்டாசு வெடித்ததில், சிறுமியின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது. 
 
இதையடுத்து, சிறுமியின் தந்தை சிறுமியை  மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 
 
இதன்போது, சிறுமியின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து சிறுமியின் தந்தை சசிகுமார், தனது மகளின்  வாயில் பட்டாசு வைத்து வெடித்த ஹர்பால் மீது காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். 
 
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், காவல்துறையினர் ஹர்பாலை தேடி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக, ஹர்பால் தலைமறைவாக இருப்பதன் காரணமாக அவரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் சிறப்பு குழுவொன்றை அமைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இந்தியச்  செய்திகள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top