Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
அமெரிக்காவில் பிரபல்யம் அடைந்துவரும் நம் தொப்புள்கொடி தாயம்

sooriyan gossip - அமெரிக்காவில் பிரபல்யம் அடைந்துவரும் நம் தொப்புள்கொடி தாயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,637 Views
தமிழர்களின் தொப்புள்கொடி தாயத்துமுறை தற்போது மேற்குலக நாட்டிலும் பிரபல்யமாகி வருகின்றது. 
கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்குமான முக்கிய பிணைப்பாக இருப்பது இந்த தொப்புள் கொடிதான்.  
 
குழந்தை பிறந்ததும்  தொப்புள் கொடி விழும் சமயத்தில் பெற்றோர்கள் கவனமாக எடுத்து வைத்துக்கொள்வார்கள்.  
 
பின்னர் தலை முறை தலைமுறையாக தமிழர்கள் பண்பாட்டில் தொப்புள்கொடியை இடுப்பில் அல்லது கழுத்தில் சிறிய தாயத்து போன்று கட்டி விடுவார்கள். 
 
சிலர் கவனாக எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
 
இந்த நிலையில், சமீப காலமாக Stem-cell therapy சிகிச்சை தொடர்பாக பலரும் அறியக்கூடியதாக இருந்தது. 
 
இதில், குழந்தையின் தொப்புள்கொடியினை பாதுகாத்து வைத்து, அதில் இருக்கும் cellலினை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் இருந்த பாதுகாப்பு அளிக்கவே இந்த Stem-cell therapy சிகிச்சை பயன்படுகிறது. 
 
ஆனால் துரதிஸ்ரவசமாக  இந்த சிகிச்சையை மேற்கொள்ள பல லட்சங்கள் ஊதியமாக கேட்டகப்படுகிறது. 
 
ஆனால் இந்த வித்தையினை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் செலவில்லாமல் செய்துள்ளார்கள். 
 
முன்னைய காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை கவனமாக எடுத்து அதை ஒரு செம்பு தாயத்தில் அடைத்து, குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.
 
ஆனால் நவீன காலத்தில் இந்த செயற்பாடு மருவிப்போய்விட்டது. 
 
தற்போது கிடைத்த புதிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த செற்பாடு மேலைத் தேய  நாட்டில் அதுவும் அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த பழக்கம் உண்டு  என்று கூறப்படுகிறது. 
 
''ரூத் ஆவுரா என்னம்'' என்ற  பெண் ஒருவர்  தனது முதல் தாய்மையின் போது இந்த வழக்கத்தினை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார். 
 
பின்னர் இந்த வழக்கத்தினை பிறரும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தொப்புள்கொடி வழக்கத்தினை நவநாகரீக கலாச்சாரத்துடன் கொண்டு செல்லும் நோக்குடன், வைர கல் பதித்த சங்கிலி பென்டன், தொப்புள் கொடி சங்கிலி 
போன்றவற்றை சந்தையில் அறிமுகம் செய்துள்ளார். 
 
தொப்புள்கொடி சங்கிலிகளை இவர் அறிமுகம் செய்ய, இந்த சங்கிலிக்கு சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. 
 
இந்த நிலையில், புளோரிடாவில் இருக்கும் பெரும்பான்மையான தாய்மார்கள் தற்போது இந்த சங்கிலியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top