Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
Rubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்

Sooriyan gossip - Rubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,067 Views
 
பொதுவாக Rubik's Cube விளையாட்டில் சிறுவர்களே அதிகம் ஆர்வத்தோடு ஈடுபடுவதை நாம் காணக்கூடியதாக இருக்கும். 
 
கலைந்திருக்கும் கியூபில் வண்ணங்களைச் சேர்ப்பதில் சிறுவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம். இந்த மாதிரி உற்சாகமான சிறுவன் ஒருவன்தான் சீனாவை சேர்ந்த கியூ ஜியான்யூ.
 
சீனாவின் ஜியாமென் மாகாணத்தில் வசித்து வரும்  கியூ ஜியான்யூக்கு  தற்போது 13 வயது. 
 
சிறுவயதிலிருந்தே கியூப் வண்ணங்களைச் சேர்க்கும் போட்டியில் பங்கேற்பது ஜியான்யூக்கு  ரொம்ப பிடிக்கும். 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரே நேரத்தில் 2 கைகளில் தலா ஒரு கியூப்பும், கால்களில் ஒரு கியூப்பும் என 3 கியூப்களில் வண்ணங்களை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு 1 நிமிடம் 36 விநாடிகள்  தேவைப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் உலக சாதனை தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கின்னஸ் புத்தக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர். 
 
சாதாரணமாக நம்மால் கலந்திருக்கும் ஒரு கியூப் வண்ணத்தைச் சேர்க்கவே கடும் பாடுபட வேண்டியுள்ளது. சிலரால் முடிந்தாலும். பலரால் ஒன்று சேர்க்க முடியாது போகும். 
 
ஆனால்  ஒரே நேரத்தில் 3 கியூப்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ள கியூ ஜியான்யூவுக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 
இதில் இன்னொரு மேலதிக தகவல் என்னவென்றால்,  இந்த சாதனை மட்டுமன்றி மேலும் 2 உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
 
அவை, தலைகீழாக தொங்கியபடி கியூப் வண்ணங்களை 15.84 விநாடிகளில் சேர்த்த சாதனை, மற்றும் தனது ஆசிரியர் யே ஜியாக்ஸியுடன் இணைந்து (ஜோடி சேர்ந்து கியூப் வண்ணங்களைச் சேர்க்கும் போட்டி) 25.63 விநாடிகளில் ரூபிக்ஸ் கியூப் வண்ணங்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளார். 
 
அதாவது கியூப்பில் ஒரு பக்கம் கியூ ஜியான்யுவும், மறுபுறம் யே ஜியாக்ஸியும் நின்று அந்த வண்ணங்களைச் சேர்த்துள்ளமை சிறப்பாகும்.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top