Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன?

Sooriyan Gossip - ''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,758 Views
அண்மையில் #metoo என்ற சொல்லை பட்டி தொட்டி எங்கும் கொண்டு வந்தவர் பாடகி சின்மயி. 
சில நாட்களிலேயே #metoo விவகாரம் அடங்கிப்போக பாடகி சின்மயி தொடர்பில் மேலும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. 
 
சின்மயி  பாடல்களை மாத்திரம்  பாடாமல் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் (Dubbing ) பேசி வருகிறார். 
 
இவர், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.
 
இவர்  #metoo விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு, அது பரபரப்பாக பேசப்பட்டது. 
 
இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு, சின்மயி ஆதரவு தெரிவித்திருந்தார். 
 
இதன் பின்னர், தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர்  ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார். 
 
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக குறித்த சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும்  தென் இந்தியா டப்பிங் சங்கத்தினால் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் என்னை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். 
 
ஆக, 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top