பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட்டன . . தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். . ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது. மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுஎன்பதும் குறிப்பிடத்தக்கது