Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
பழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்

sooriyan gossip - பழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,684 Views
அந்தமான் தீவில் பழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை என்றும் மேலும் இரண்டு அமெரிக்கர்கள் அந்தமானுக்கு வந்து சென்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் பழங்குடி மக்கள், உலக மக்கள் வாழ்வில் இருந்து முற்றிலும் தம்மை தனிமைபடுத்தி தனி வாழ்வை நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள். 
 
அங்கிருக்கும் தீவிற்கு வேறு வெளியாட்கள் யாராவது  வந்தால், அம்பு எய்தி கொன்று விடும் வழக்கம் அவர்களிடம் இருந்து வருகிறது. 
 
அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான  ஜான் ஆலன் சவ் என்பவர் ஒரு மத போதகர். இவர், சென்டினல் பழங்குடி மக்களிடம், கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார். 
 
அங்கு செல்லும் வெளி ஆட்களை அவர்கள் கொலை செய்து வரும் நிலையில், கடந்த 17 ம் திகதி சென்டினல் பழங்குடிகள் அவரை கொன்று அவரது உடலை அத்தீவிலேயே புதைத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஆனால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் சவ்வின் உடலை மீட்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், மீட்கும் முயற்சியை கை விட வேண்டும். பழங்குடி மக்களை தொந்தரவு செய்ய கூடாது என்று நிபுணர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
இச்சூழ்நிலையில், மத போதகர் ஜான் ஆலன் சவ் தனி ஆள் இல்லை என்றும், அமைப்பொன்றின்  பின்னணி கொண்டவராக இருக்கலாம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 
மேலும் குறித்த அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த 53 வயது பெண் ஒருவரும்,  கொலராடோ பகுதியை சேர்ந்த 25 வயது ஆண் ஆகியோர் நவம்பர் 5ம் திகதி முதல், 10ம் திகதி வரை அந்தமானில் தங்கியுள்ளனர்.
 
இவர்களில், குறித்த ஆண் கடந்த 5ம் திகதி இந்தியாவுக்கு வந்து  மீண்டும்  அந்தமானுக்கு திரும்பியுள்ளார். அமெரிக்க பெண் அக்டோபரில் இருந்து இந்தியாவில் இருந்துள்ளார். 
 
அந்தமானில் அலெக்சாண்டர் என்ற உள்ளூர் நபரின் வீட்டில், மத போதகர் சவ் சென்ற நிலையில், அவர்கள்தான் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்லும்படி மத போதகர் சவ்விடம் வலியுறுத்தியுள்ளனர். 
 
பின்னர் அவர்கள், நவம்பர் 10ம் திகதி அந்தமானில் இருந்து புறப்பட்டு விட்டனர். அத்துடன் இது குறித்து உள்ளூர் நபர் அலெக்சாண்டரிடம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. .
 
கடந்த10ம் திகதி ஏனையவர்கள்  அங்கிருந்து செல்ல, மறு நாள்   நவம்பர் 11ம் திகதி வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல மத போதகர் சவ், திட்டமிட்டு இருந்தார். 
 
ஆனால் அவர் திட்டமிட்டபடி நவம்பர் 14 ம் திகதி அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதற்கு வங்கக் கடலில்  ஏற்பட்ட புயல்தான் காரணம் என்று அவரது டைரி குறிப்புகளில் கண்டறியப்பட்டுள்ளது. 
 
இதனை தொடர்ந்து, மத போதகர் அந்த தீவுக்கு செல்ல, மீனவர்கள் ஐவர் கிட்டத்தட்ட இலங்கை பெறுமதிக்கு 75  ஆயிரம் ரூபாவை பெற்று, அவருக்கான பயண உதவிகளை புரிந்துள்ளார்கள். இந்த விடயத்தை விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்துறையினரிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மத போதகர் சவ்வோ அவர்களை, ''நம்பிக்கை கொண்டவர்கள்'' என்றே டைரியில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பணம் கொடுத்ததாக டைரியில் குறிப்பிடவில்லை. பணம் கொடுத்ததாக மீனவர்கள் தெரிவித்தமை உண்மையா  பொய்யா என்று விசாரணைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
கடந்த 16ம் திகதி இரவு மத போதகர் சவ், பாஸ்போர்ட், உடைகள், முதலுதவி பொருட்கள், மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை பை ஒன்றில்  எடுத்து கொண்டு, மீனவர்களுடன் அந்தத்  தீவுக்கு அருகே சென்றுள்ளார். 
 
சிறு படகில் அந்த தீவிற்கு சென்று அந்த பையை மறைத்து வைத்து விட்டு, மீண்டும் மீனவர்கள் இருந்த படகுக்கு வந்துள்ளார். அவர்களிடம் தனது டைரி குறிப்புகளை கொடுத்து மீண்டும் சிறு படகில், தீவை நோக்கி சென்றுள்ளார். அது தான் அவரை மீனவர்கள் கடைசியாக உயிருடன் பார்த்தது.  அடுத்த நாள் அவரது உடலை தாம் தொலை தூரத்தில் இருந்து பார்த்துள்ளனர்.
 
இவ்வாறு காவல் அதிகாரிகள் தெரிகின்றனர்.
 
எவ்வாறு இருப்பினும் விசாரணைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் உண்மையில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை அறிய முடியும். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top