இலங்கையின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு அழகிய நகரம் புத்தளம். தெங்கு முக்கோண வலையமாக அமைந்துள்ள இந்த நகரத்தில், கடல் வளம் இருப்பதனால் உப்பு உற்பத்தியும் இம்மாவட்டத்தில் சிறந்து விளங்குவதோடு இறால் வளர்ப்பும் பொருளாதார ரீதியாக இலாபமீட்டக்கூடிய தொழிலாக காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது புத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், இறால்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை காரணமாக, இறால் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தமது உற்பத்திச் செலவுகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக இறால் பண்ணையாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமக்கான நிர்ணயவிலை ஒன்றை வகுத்துத் தர வேண்டும் என்று, இறால் பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுகிறார்கள்.