Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
இனிதாக முடிந்தது திருமணம் - மகிழ்ச்சியில் பிரியங்கா....

SooriyanFM Gossip - இனிதாக முடிந்தது திருமணம் - மகிழ்ச்சியில் பிரியங்கா....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,171 Views
பிரியங்கா சோப்ரா, தமிழன் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பொலிவூட் கதாநாயகி.  இவர் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற கையோடு,  தமிழன் திரைப்படத்தில் அறிமுகமானவர். அடுத்தடுத்து பொலிவூட் ஹாலிவுட் என பிரபலமானவர். இந்த சமயத்தில்தான் பொப் இசை பாடகர் நிக் ஜோனாஸுக்கும் பிரியங்காவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால், இவர்களின் காதல் விவகாரம் விமர்சனத்திற்கு உள்ளானது. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால், இருவரும் லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் நகரங்களில் ஜோடியாக சுற்றிய படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே செய்தன.

இந்த சூழலில், தங்களது காதல் குறித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்காமல் மெளனம் காத்த இந்த ஜோடியின் திருமணத்துக்கு ஒருவழியாக இரு குடும்பத்தாரும், பச்சைக்கொடி காட்டினர். தொடர்ந்து, கடந்த மாதம் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. இந்த நிகழ்வில் 2 கோடி ரூபாய் மதிப்பில் வைர மோதிரம் ஒன்றை பிரியங்காவுக்கு நிக் ஜோனாஸ் அணிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், திருமண ஏற்பாடுகள் கடந்த 29 ஆம் திகதி மருதாணி விழாவுடன் ஆரம்பித்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் ஆடைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதற்காக சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு, வான வேடிக்கையுடன் கொண்டாடினர்.

திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்து பாரம்பரிய முறைப்படி, இன்று திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்கவரும் விருந்தினர்கள், நண்பர்களுக்காகவே ஜோத்பூர் அரண்மனையில் 200 அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இந்த ஜோடி குடியேற உள்ளனர். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றையும் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் விலைக்கு வாங்கி உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top