Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
தான் பற்ற வைத்த நெருப்பின் வெம்மையில் வேகித் தவிக்கும் சின்மயி - 'Me Too' நெருப்பு.

SooriyanFM Gossip - தான் பற்ற வைத்த நெருப்பின் வெம்மையில் வேகித் தவிக்கும் சின்மயி - 'Me Too' நெருப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,985 Views
திரையுலம் சார்ந்த மீ டூ பரபரப்பு கொஞ்சம் கூட குறைந்ததாக தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி பற்ற வைத்த மீ டூ நெருப்பின் வெம்மை, தற்போது சின்மயியையே சுட ஆரம்பித்துள்ளமை தான் பெரும் கொடுமை.

தான் ஆரம்பித்து வைத்த மீ டூ விவகாரத்தால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான பாடகி சின்மயி தற்போது எவ்வித சினிமா வாய்ப்புக்களும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்குக் காரணம், அவரை டப்பிங் யூனியன் அங்கத்துவத்திலிருந்து நீக்கியுள்ளது அந்த சங்கம். குறித்த உறுப்பினர் பதவியிலிருந்து பாடகி சின்மயியை தாம் விலக்கியமை, சங்கத்திற்கான சந்தாப் பணம் செலுத்தாமையே என்று விளக்கமும் கொடுத்துள்ளது டப்பிங் யூனியன். ஆனால் வாழ்நாள் சந்தா தொகையையே தாம் செலுத்தி முடித்திருப்பதாக சின்மயி கூறுகின்றார்.

இது இப்படியிருக்க, டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதா ரவி தான் தனது வாய்ப்புகள் பறிபோக காரணமாக இருக்கின்றார் என்று தெரிந்து கொண்ட சின்மயியின் கோபம் தற்போது நடிகர் ராதாரவி பக்கம் திரும்பியிருக்கின்றது. இதனால், நடிகர் ராதா ரவியை சீண்டும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் பாடகி சின்மயி.

பிரபல குணசித்திர நடிகரான ராதாரவி பெரும் திரையுலகப் பின்னணியை கொண்ட ஒருவர். அவர், சில காலமாக தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை இணைத்து கொள்கின்றார். குறித்த 'டத்தோ' பட்டமானது, மலேசிய அரசினால் வழங்கப்படுகின்ற கௌரவத்திற்குரிய ஒரு விருது. இந்த கௌரவப் பட்டத்தை நடிகர் ராதாரவிக்கு மலேசிய அரசு வழங்கவே இல்லை. இருந்தும், ராதாரவி அதை பயன்படுத்துகின்றார். இதுதொடர்பாக தான் மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு கடிதம் எழுதி விசாரித்ததாகவும், அதற்கு கிடைத்த பதில் கடிதம் எனக் கூறி, அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பாடகி சின்மயி.

குறித்த கடிதம் பற்றி மேலும் விளக்கமளிக்கும் சின்மயி குறிப்பிடுகையில், "தமது மலேசிய அரசாங்கம் நடிகர் ராதாரவிக்கு எந்த கௌரவப் பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருக்கின்றது" என மலேசிய அரச செயலர் தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருப்பதாகவும், எனவே ராதாரவி பயன்படுத்தும் "டத்தோ" பட்டம் போலியானது என்றும் பரப்பரப்பைக் கிளப்பியிருக்கிறார் சின்மயி.

இது குறித்து கொதித்துப்போயுள்ள நடிகர் ராதாரவி கூறுகையில், "சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.

நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் சில தினங்களில் சென்னைக்குத் திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்" என்று கொந்தளிக்கிறார் ராதாரவி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top