Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
5-ம் திகதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு - ரகசியத்தை உடைத்தார் இயக்குனர் ஷங்கர்

sooriyan gossip - 5-ம் திகதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு - ரகசியத்தை உடைத்தார் இயக்குனர் ஷங்கர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,691 Views
ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் 2.௦.

ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் என்று பிரபல்யங்களின் நடிப்பில் வெளியாகி உலக அளவில் இந்திய ரூ.400 கோடியைத் தாண்டி வசூல் செய்து, தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
 
இந்த நிலையில், 2 .o வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் மனம் விட்டு தன்னைப்பற்றி பேசி இருக்கிறார். 
 
''டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு factoryல வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா ஆர்ப்பாட்டம் நடந்து factoryயை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே போகணும்னு ஆசை. ஆனா அப்பாவுக்கு நான் சினிமாவுக்குள்ளே போறதுல விருப்பமில்லை. அம்மாவுக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். 
 
அம்மாவுக்கு இங்கிலீஷ்லாம் பெருசா தெரியாது. ஆனாலும் பேப்பர்ல டி.எம்.இ. படிப்புக்கு ஆட்கள் தேவை விளம்பரம் வந்துருக்கானு பாத்துக்கிட்டே இருப்பாங்க. இங்கிலீஷ்ல வந்திருக்கிற அந்த விளம்பரங்களை, கஷ்டப்பட்டு, கண்டுபிடிச்சு, எங்கிட்டக் காட்டுவாங்க. ‘இந்தக் கம்பெனில வேலை இருக்குன்னு போட்டிருக்குடா’ன்னு சொல்லுவாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும். 
 
இந்த கால கட்டத்தில், நாடகங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், என்னை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தாரு. அவர்கிட்ட உதவி டைரக்டரா சேர்ந்தேன். அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு வேலைக்குப் போய் மாசம் பொறந்தா சம்பளம்னு இல்லாம, என்ன இவன் இப்படிப் பண்றான்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தார்.
 
இந்த சமயத்துல எஸ்.ஏ.சந்திரசேகர் சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா, எவ்ளோ பிரச்சினைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் மாசாமாசம் 5ம் திகதி எண்டால் போதும், டாண்ணு சம்பளம் கொடுத்துருவார்.
 
இந்தச் சம்பளம் மாசாமாசம் குறிப்பிட்ட  திகதியில் கிடைக்குதுங்கறதால, அப்பாவுக்கு நிம்மதி. அதன் பிறகுதான், சினிமா வேலையை ஏத்துக்கிட்டாரு அப்பா. சொல்லப்போனா, அந்த 5-ம் திகதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு''.
 
இவ்வாறு  இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top