Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
வளைகுடா நாடுகளுக்கு பெருமை சேர்க்கும் Qatar - FIFA 2022

sooriyan gossip - வளைகுடா நாடுகளுக்கு பெருமை சேர்க்கும் Qatar - FIFA 2022Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,278 Views
2022 ஆண்டுக்கான  FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த Qatar நாடு தயாராகி வருகிறது.
பல்வேறு வழிகளிலும் நெருக்கடியைச் சந்தித்துவந்தாலும், உலகக் கோப்பையை நடத்தும் முதல் வளைகுடா நாடு என்ற பெருமையை Qatar நாடு பெறவுள்ளது. 
 
இதை விட, உலகக் கோப்பையை நடத்த இருக்கும் சிறிய நாடு என்ற பெருமையும் Qatarக்கு கிடைக்கவுள்ளது.   
 
ஆனால், Qatarக்கு 2022 ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு, மிக எளிதில் கிடைக்கவில்லை. 
 
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் போராடி இந்த வாய்ப்பு Qatarக்கு கிட்டியது. 
 
இதனிடையே, எதிர்பாராத விதமாக, 2017-ம் ஆண்டு Qatarக்கு  மிகப் பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், எகிப்து ஆகியனை  தமது உறவை துண்டித்துக் கொண்டன. 
 
இதனால் அரசியல், வர்த்தகம், போக்குவரத்து ஆகிய அனைத்தும்  கிடைக்கப்பெறாது Qatar தனிமைப்பட்டது. 
 
இது மாத்திரமன்றி, “கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கிறது; ஈரானுடன் நெருக்கமாக இருக்கிறது” என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு, சர்வதேச ஊடகமான ''Al Jazeera '' தொலைக்காட்சியை நிறுத்த வேண்டும் என்றும், ஈரானுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விடுத்து, அதற்கு ஒப்புக்கொண்டால் அனைத்து தடைகளும் நீக்கப்படும் என்று குறித்த அண்டை நாடுகள் Qatarக்கு கெடு விதித்தன. 
 
ஆனால், குறித்த  நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் முற்றிலுமாக மறுத்த Qatar, அவற்றின் நிபந்தனைகளையும் ஏற்கவில்லை. 
 
''உங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எங்கள் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்'' என்று பதிலடி கொடுத்தது Qatar. 
 
இதனால் ஆவேசம் கொண்ட  சவுதி உள்ளிட்ட நாடுகள், ''qatarக்கு எதிராகப் புதிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம்'' என்று அச்சுறுத்தின. 
 
விமானப் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால்   Qatarக்கு வெளிநாட்டவர்களோ, Qatarல் இருந்து வேறு நாட்டிற்கோ செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.  
 
மேலும்,  டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் நிறுத்தப்பட்டதால், Qatarல் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆனால் இவை அனைத்தும்  ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்த தேவைகளை தனது  நாட்டிலே தீர்த்துக்கொள்ளும் வழிமுறையை Qatar மிக விரைவில் மேற்கொண்டது.
 
இப்படி முகுந்த நெருக்கடிகளை சந்தித்த Qatar  2022-ம் ஆண்டு நவம்பர் 21-ம் திகதி, டோஹாவில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்தவுள்ளது. 
 
இதனிடையே, 2022 FIFA உலகக் கோப்பைத் கால்பந்து தொடரில், 48 அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. முன்னர் 36 அணிகள் பங்குபெறுவதாக பேசப்பட்டது. அதற்கேற்றபடி ஸ்டேடியம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை qatar ஏற்பாடு செய்து வந்தது. ஆனால், FIFA அமைப்பு, அணிகளின் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது. 16 அணிகள் கூடுதலாகச் சேர்த்தால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
 
மைதானங்களின் தேவை எண்ணிக்கையும் அதிகரிக்கும். இங்கு 9 மைதானங்கள்தான் உள்ளன. எனவே FIFA மற்ற வளைகுடா நாடுகளுடன் போட்டி உரிமையைப் பகிர்ந்துகொள்ள Qatarரிடம் பேசி வருகிறது. 
 
அதாவது, பாதி போட்டிகளை Qatarரிலும் மீதி போட்டிகளை   மற்ற வளைகுடா நாடுகளிலும் நடக்கும். FIFAவின் இந்தத் திட்டத்துக்கு  Qatar ஒப்புக்கொள்ளவில்லை. 
 
உண்மையில், உலகக் கால்பந்து போட்டியில் பங்குபெறாத ஒரு சிறிய நாடு, பணத்தை அளவு கணக்கின்றி செலவழித்து சர்வதேச தரத்தில் மைதானங்களை அமைக்கிறது. உலகக் கோப்பை முடிந்ததும் அந்தப் பிரமாண்ட கால்பந்து மைதானங்களுக்கு வேலையில்லை. ஆனாலும் புதிதாகக் கால்பந்து மைதானங்கள் அமைக்கவும் நாங்கள் தயார் என்று சவால் விடுக்கிறது. 
 
அத்துடன், கிடைத்த உரிமத்தை பங்குபோட மாட்டோம் என்றும் உறுதியாகக் கூறியிருக்கிறது. qatarரின் தனித்துவம் இதுதான். எந்தச் சூழலிலும் யாருக்கும் தலைவணங்காது. படிந்தும் போகாது. இந்தத் தனித்துவம்தான் பிற வளைகுடா நாடுகளின் பிரச்சினை.
 
எப்படியோ, Qatarரில் உலகக் கோப்பை நடக்கும். இது வளைகுடா நாடுகளின் பெருமை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top