Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
FACE BOOK _ல் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காதலனுக்கு நடந்தது என்ன?

SooriyanFM Gossip - FACE BOOK _ல் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காதலனுக்கு நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

994 Views
மாணவி ஒருவரை காதலித்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய, 28  வயதான வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. 
 
திருப்பதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் நாகராஜ். இவர் அங்குள்ள ரயில் நிலையத்தில் பழங்களை விற்பனை செய்து வருகிறார். 
 
FACE  BOOK கணக்கை வைத்துள்ள இவர், ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை FACE  BOOK மூலமாக அறிமுகம் ஆகி காதலித்து வந்தார். 
 
நாளடைவில் காதலன் நாகராஜை சந்திப்பதற்காக குறித்த மாணவி , சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கற்றலை தொடர்ந்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து வந்துள்ளார். 
 
இந்த நிலையில், மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கியுள்ளார். மாணவியும் காதலன்தானே என்று அவற்றை கொடுத்துள்ளார். 
 
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு குறித்த மாணவியை 
காதலன் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 
 
அங்கு தனியார் விடுதியின் அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார். 
 
பின்னர் அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, இலங்கை ரூபா பெறுமதிக்கு  கிட்டத்தட்ட 60 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார். அப்படி தராவிட்டால், 
நிர்வாணப் படங்களை FACE  BOOKகில் வெளியிடுவேன் என்று பயமுறுத்தியுள்ளார்.  
 
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. இப்படி சண்டைகள் வரும் போது மாணவியை  அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. 
 
இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். 
 
அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்தனர். காவல்துறையினர் விரைவாக செயற்பட்டு 
நாகராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். 
 
அத்துடன் திருப்பதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி  சிறையில் அடைத்தனர். 
 
இதனிடையே, நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார்,  இரவு திருப்பதி காவல் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து, அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top