Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
வங்கிக் கடனை 100% திரும்ப செலுத்தத் தயார் - தாழ்மையுடன் twitter செய்த விஜய் மல்லையா

SooriyanFM Gossip - வங்கிக் கடனை 100% திரும்ப செலுத்தத் தயார் - தாழ்மையுடன் twitter செய்த விஜய் மல்லையாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

774 Views
இந்திய வங்கிகள் பலவற்றிலும் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாது, வெளிநாட்டில் தலை மறைவாக வாழ்ந்து வரும் விஜய் மல்லையா, தான் வாங்கிய கடனை 100% திரும்ப செலுத்த தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார். 

இந்தியாவில் உள்ள வங்கிகள் பலவற்றில் சுமார் இந்திய ரூபா பெறுமதிக்கு 9 000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று, அவற்றை திருப்பி அடைக்காமை காரணமாக தலை மறைவாகி விஜய் மல்லையா வாழ்ந்து வருகிறார். 
 
பாரிய பண ஊழலில் ஈடுபட்ட குற்றத்தில் இவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்த போது, லண்டனில் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டது.  
 
இதனை தொடர்ந்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசு, கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இதனிடையே, விஜய் மல்லையா தொடர்பான வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.  
 
இந்த நிலையில்தான், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணம் முழுவதையும் செலுத்துவதாகவும், சம்மந்தப்பட்ட வங்கிகள்; குறித்த பணத்தொகையினை தயவு செய்து  பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள விஜய் மல்லையா, அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். 
 
இவை முழுவதும் பிழையானவை. 
 
கர்நாடக நீதிமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன்யாரும் அதிகம் பேசவில்லை? 
 
நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வெளி வருகின்றன. இந்த விஷயத்தை நான் சட்டப்பூர்வமாக சந்தித்துக்கொள்கிறேன். ஆனால், இங்கு முக்கிய விடயம் என்னவென்றால், இவை மக்கள் பணம். 
 
அந்தப் பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன் என்று பதிவிட்டவர், நான்  திருப்பி செலுத்தும் பணத்தை வங்கிகளும் அரசாங்கமும்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். 
 
ஆனால், நான் திரும்பச்செலுத்த முன்வருவது மறுக்கப்பட்டால்?” எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து ட்விட்டரில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top