Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
இலங்கை பணிப்பெண்கள் 350 க்கும் அதிகமானோரின் நிலை இதுதான்

SooriyanFM Gossip - இலங்கை பணிப்பெண்கள் 350 க்கும் அதிகமானோரின் நிலை இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

169 Views
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
 


அவர்களுக்கு தொழில் வழங்கும் தருநர்கள், உரியமுறையில் சம்பளம் வழங்காமை, தொழில் இடங்களில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த பணிப்பெண்கள் அசௌகரியங்களை சந்திக்கின்றனர். 
 
இந்த நிலையில், வௌிநாடுகளுக்கு வேலைகளுக்காக சென்றுள்ள 350 க்கும் அதிகமான இலங்கை பணிப் பெண்கள், சில நாடுகளின் தூதுரகங்களின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறுகிறது. 
 
அவர்களில் அதிகமானோர் சவூதி மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள தூதுரகங்களின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதனால், அந்தந்த நாட்டுக்கு உரிய தொழில் அமைச்சுக்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி, குறித்த  இலங்கை பணிப்பெண்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
எவ்வாறு இருப்பினும் சில பெண்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்க இணங்காத நிலையில், அவர்களுக்கு அந்த நாடுகளிலேயே பிறிதொரு தொழில் தருநர்களிடம் பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏனையவர்கள் நாட்டிற்கு மீள அழைத்து வரப்படவுள்ளார்கள். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top