Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
அம்மாவாகப்போகிறாரா அனுஷ்கா?

SooriyanFM Gossip - அம்மாவாகப்போகிறாரா அனுஷ்கா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,923 Views
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்  விராட் கோலிக்கும்  பிரபல பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. 

இந்த நிலையில் அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த அனுஷ்கா சர்மா, தனது வயிற்றை மறைத்தபடி சென்றார். மேலும் கேமரா மேன்களையும் அருகில் நெருங்க விடாதபடி பாதுகாவலர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுஷ்கா மறுத்துவிட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் ஆர்வத்துடன் அனுஷ்கா செல்பி எடுத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் திடீரென ரசிகர்களை கண்டு ஒதுங்குவது, கேமரா மேன்களை அருகில் நெருங்க விடாமல் இருப்பது இதற்கெல்லாம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தகவல்கள் பரவலாக வெளிவருகின்றன.

இந்நிலையில் மீண்டும் ஒரு விழாவில் பங்கேற்ற அனுஷ்காவை பார்த்த பலரும், நீங்கள் கர்ப்பமா? என கேள்வி கேட்டு நலம் விசாரித்துள்ளனர்.

அதற்கு அனுஷ்கா சட்டென கோபமாகி அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஊடகங்களிடம் காரசாரமாக பேசியுள்ளார்.''நீங்க என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அதைப் படித்து விட்டு நான் சிரித்தபடி போய் விடுவேன். ஆனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் '' என மிகுந்த ஆவேசத்தோடு தெரிவித்துள்ளார் .

மேலும் தான் தாய் ஆகும் தகவலை தனது கணவருடன் இணைந்து வெளிப்படையாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top