Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
கடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்

sooriyan gossip - கடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,439 Views
நடிகர் ''பவர் ஸ்டார்'' என்று அழைக்கப்பட்ட சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்தமை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சர்சையில் சிக்குவதில் பெயர் போனவர். தமிழ்த்திரையுலகில் இரண்டுக்கும் மேற்பட்ட சொந்தப்படங்கள் எடுத்தது மட்டுமன்றி, கண்ணா லட்டுத்தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். 
 
இவர் மீது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நிலமோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளன. 
 
கடந்த ஆண்டு கூட, டெல்லியில் கட்டுமான நிறுவன தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக இந்திய ரூ.10 கோடியை, பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கியதாக பதிவான முறைப்பாட்டில் அவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். 
 
இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பவர்ஸ்டார், நேற்றும் பரபரப்பு செய்தியாக மாறினார். 
 
நேற்று மாலை அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார். 
 
பணத்துடன் சென்ற தனது கணவர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்று அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது. 
 
இதையடுத்து காவல்துறையினர் இவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரது தொலைபேசியை ட்ரேஸ் செய்தனர். அவரது கையடக்க தொடைபேசி ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. 
 
உடனடியாக காவல்துறையினர்  அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அவரே எடுத்து பேசியுள்ளார்.
 
தான் கடத்தப்படவில்லை என்றும், ஒரு நிலம் தொடர்பான  ரெஜிஸ்ட்ரேஷன் சம்பந்தமாக ஊட்டிவரை வந்துள்ளதாகவும் நாளை சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உங்கள் மனைவி உங்களை காணவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என்று காவல்துறையினர் கூற ,அப்படியா? என்று வினவிய அவர், என்னுடன்தான் என் மனைவி உள்ளார் என்றும்  கூறியுள்ளார்.
 
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், 
தொலைபேசியை அவரது மனைவியிடம் கொடுக்கச்சொன்ன காவல்துறையினர், முறைப்பாடு கொடுத்துவிட்டு ஊட்டியில் கணவருடன் இருக்கிறீர்களே ஏன் எங்களுக்கு தகவல் சொல்லவில்லை, காவல்துறையினர் உங்களுக்கு விளையாட்டு பொருளா என்று கேட்டுள்ளனர். 
 
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்காக காவல்துறையினரிடம் பவர்ஸ்டார் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top