Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
பாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்

SooriyanFM Gossip - பாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,272 Views
நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் நேற்று (11-12-2018).

இந்த நாளில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரகுவரனுடனான தனது நட்பைப் பற்றி விவரிக்கிறார்...
1994-ஆம் வருடம். 'வீரா' வெளியாகப் போகும் வாரம். ரஜினிகாந்த் எதிர்பாராத விதமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தனது அடுத்த படம் 'பாட்ஷா' என்று அறிவித்தார். 

'அண்ணாமலை' மற்றும் 'வீரா' என அடுத்தடுத்து எங்கள் இணை ஹிட் கொடுத்த்தால் அதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் ரஜினிகாந்த். 'பாட்ஷா' என்கிற தலைப்பு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. எதிர்பார்ப்புகள் அளவுக்கதிகமாக உருவாகின.

படம் ஆரம்பமானதிலிருந்தே நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். நாயகனின் வலிமைக்கு வில்லனும் சரிசமமாக இருக்க வேண்டும். அதனால், மாணிக்கம் மற்றும் பாட்ஷா கதாபாத்திரங்களை எழுதிய பின் வில்லன் கதாபாத்திரத்தை நான் உருவாக்க ஆரம்பித்தேன். 

வில்லனின் பெயர் மார்க் ஆண்டனி என முடிவு செய்தேன். பாலிவுட்டில் சிலரை அணுகினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்கும் இடையே சண்டை என்பது கைகளை முறுக்கிக்கொண்டு நடப்பதல்ல. புத்தியை வைத்து நடப்பது என்பது புரிந்தது. அப்போதுதான் ரகுவரனின் பெயர் தோன்றியது. அவரிடம் ஒரு தனித்துவம் உண்டு. உயரமானவர். ஆழமான குரலைக் கொண்டவர். அவரது பெயரை யாரோ ஒருவர் உத்தேசித்த போது நானும் ரஜினியும் உடனடியாக ஒப்புக்கொண்டோம். 

பின் கதை சொல்ல, ரகுவரனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கண் இமைக்காமல் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் சொல்லி முடித்தேன். ஆனால் அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. அவருக்குப் பிடித்ததா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அந்த அமைதி என்னைக் கொன்றது. 

அவரது மேனேஜரை ஒரு பார்வை பார்த்தேன். அவருக்கும் எதுவும் புரியவில்லை. ஒரு நொடி என் கண்களும் ரகுவரன் கண்களும் சந்தித்தன. உடனடியாக அவரது கண்கள் விரிந்தன. அவர் தனது பற்களைக் கடித்துக் கொண்டிருந்தார். அவரது தாடை ஆடுவது தெரிந்தது. அவர் எவ்வளவு தனிமையில் இருந்தார், எப்படி அவரது மனநிலை திடீர் திடீரென மாறும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சிந்தனைகள் எல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

அப்போது, ரகுவரன், தனக்கே உண்டான பாணியில், 'ஆண்டனி.... மார்க் ஆண்டனி' என்றார். அட! அந்த நொடி அற்புதமானது. நான் நினைத்த ஆண்டனி என் கண் முன் உட்கார்ந்து கொண்டிருந்தார். எனது அந்த உற்சாகத்துக்குப் பிறகு அவரது கை குலுக்கி கட்டி அணைத்தேன். அப்படித்தான் எனது ஆண்டனி உருவானான். 

படப்பிடிப்பு முழுவதுமே ரகுவரன் அற்புதமாக நடித்தார். அவர் எவ்வளவு குறைவாகப் பேசினாலும் தன் சக்திவாய்ந்த கண்களால் பலவற்றைப் பேசினார். ரகுவரனின் தோற்றம், குரல், நடிப்பு என எல்லாம் ரஜினிகாந்துக்கு அவ்வளவு பிடித்தது. இரண்டு பெரிய நடிகர்கள் ஒருவருக்கொருவர், மற்றவரது திறமையை மதித்துக் கொண்டது பார்க்க அவ்வளவு இதமாக இருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கட்டும், ஜெயிலிலிருந்து தப்பித்த பிறகு தேவனைப் பார்க்கும் பார்வையாக இருக்கட்டும், பல தருணங்களை என்னால் நினைவுகூர முடியும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆண்டனி தனியாக விடப்படும்போது ரகுவரனின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும்.

படத்தின் இறுதிப் பிரதியைப் பார்க்கும்போது, ரகுவரனின் சிறந்த நடிப்பைப் பார்த்து பல இடங்களில் ரஜினிகாந்த் அவரைத் திட்டினார். நாங்கள் அனைவரும் சிரிப்போம். ரகுவரன் அந்தக் கதாபாத்திரத்தை அழிவற்றதாக மாற்றினார். 'பாட்ஷா' படப்பிடிப்பின் போது நான் ரகுவரனுடன் நல்ல நண்பனாக ஆகிவிட்டேன். அவரின்றி படமே யோசிக்க மாட்டேன். அதனால்தான் 'ஆஹா' படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என விரும்பினேன். அப்போது அவர் செய்து கொண்டிருந்த கதாபாத்திரங்களின் தன்மைக்கு நேரெதிர் கதாபாத்திரம் அது. அந்தக் காலகட்டத்தில் தான் அவர் ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டார். 

ரகுவரன் பார்க்க அவ்வளவு அழகாக, ஹாண்ட்சமாக இருந்தார். 'ஆஹா' படத்திலும் அற்புதமான நடிப்பைத் தந்தார். படத்தில் ஒரு அந்தாக்‌ஷரி பாடல் காட்சியில், 'அழகிய ரகுவரனே' என்று வரிகள் வரும்போது தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு நடிப்பை என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு அழகான நடிப்பு. 'ஆஹா' தெலுங்கில் எடுக்கும்போது மீண்டும் அவரையே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். பின் தமிழில் 'ஒருவன்' படத்தில் இணைந்து பணி புரிந்தோம். 

'பாபா' படத்தில் அவர் நடிக்க வேண்டியது. நானும் ரஜினிகாந்தும் பேசிக்கொண்டிருந்த போது, இருவருக்குமே வில்லன் கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ரகுவரனும் ஆர்வமாக இருந்தார். ஆனால் 'பாபா' என்ற நாயகனின் கதாபாத்திரத்தை அவர் படத்தில் சில காட்சிகளில் திட்ட வேண்டும். ரகுவரனோ தீவிர சாய்பாபா பக்தர். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன் தயங்கினார். இறுதியில் அவரில்லாமல் வேறொரு இந்தி நடிகரை அதில் நடிக்க வைத்தோம். 

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும், நம்மிடையே இருந்த சிறந்த நடிகர்களில் ஒருவராக ரகுவரன் இருக்கிறார். அவர் சீக்கிரம் இறந்துவிட்டார். இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை தனக்கே உரிய பாணியில் நடித்திருப்பார். அவரது ஆழமான குரல் அதிசயமானது. அவர் எப்போது என்னை தொலைபேசியில் அழைத்தாலும், 'ஹாய் சுரேஷ்... இது ஆண்டனி, மார்க் ஆண்டனி' என்பார். அந்தக் குரல் எனக்கு இன்னும் கேட்கிறது.

மறைந்தாலும், இப்படி பலர் நினைவுகளில் வாழும் நல்ல நடிகர் ரகுவரன் என்றால் அது மாறாத உண்மையே!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top