Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
காரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் !

SooriyanFM Gossip - காரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

574 Views
Google நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் செயற்படவில்லை என்று அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

அண்மையில், சீனாவில் புதிய தேடுபொறியை  தொடங்க Google  திட்டமிட்டுள்ளது என்றும், அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்றும் Google நிறுவனம் மீது முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், நாடாளுமன்ற விசாரணைகுழு முன்பாக சுந்தர்பிச்சை நேற்று நேரில் முன்னிலையாகி விளக்கம் கொடுத்துள்ளார். 
 
Google தளம் அனைத்து விதமான கருத்துக்களும் பதிவு செய்யும் தளமாக இயங்கும் அதேவேளை, அரசியல் பாரபட்சத்துடன் Google செயல்பட்டதே இல்லை என்றும்  சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார். 
 
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டு,  ஆங்கிலத்தில் முட்டாள் என தட்டச்சத்து செய்தால் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்-பின் பெயர் வருவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, திட்டமிட்டு இப்படி ஒரு தவறு Google ல் இடம்பெறுவதில்லை என்றும்,  தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகள் சேர்ப்பதாக குறிப்பிட்டார்.  
 
மேலும்  சீனாவில் Google ன் தேடு பொறியை தொடங்கும் திட்டம்  தற்போதைக்கு இல்லை என்றும் கூறினார். 
 
ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை விவகாரத்தில், சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக ஐநாவின் மனித உரிமை அமைப்பு எழுப்பிய குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா? என பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயப்பால் கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதில் வழங்கிய சுந்தர் பிச்சை, வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள் பேச்சுக்களை தணிக்கைக்கு உட்படுத்தியே google பதிவை மேற்க்கொள்கிறது என்று தெளிவுபடுத்தினார். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top